ஆடியில் வரும் மஹாவராஹி நவராத்திரி
புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி
மாசியில் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி
பங்குனியில் வரும் லலிதா நவராத்திரி
என்று ஒவ்வொரு ஆண்டும் நான்கு நவராத்திரி
விரதத்தை யார் மேற்கொள்ளுகிறார்களோ,அவர்களுக்கே அன்னை அம்பிகையின் அருள் பரிபூரணமாகக்
கிட்டும்;
ஒரு தமிழ் வருடத்தில் நான்கே நான்கு நவராத்திரிகள் தான் இருக்கின்றன
என்று எண்ணுவது தவறு;தமிழ் வருடங்கள் 60லும்,ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான நவராத்திரி
விரதங்கள் இருக்கவேண்டும்;மொத்தம் 720 விதமான நவராத்திரி விரதங்கள் இருக்கின்றன;
தற்காலத்தில் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விரதத்தை மட்டுமே நாம்
கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்;
பூமியில் பிறக்கும் புல்,பூண்டு,பாக்டீரியா,வைரஸ்ஸில் இருந்து மனிதன்
வரையிலும் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒன்பதுவிதமான உடல்கள் உண்டு;ஒன்பது சரீரங்களில் தான்
நாம் மாறி மாறி உயிர் வாழ்ந்து வருகிறோம்;இதைக் குறிக்கும் விதமாகத்தான் நவராத்திரியில்
ஒன்பதுவிதமான அலங்காரங்கள் அம்பிகைக்கு செய்து வழிபடுகிறோம்;
ஓம் அகத்தீசாய நமஹ
No comments:
Post a Comment