Saturday, April 16, 2016

செல்வ வளத்தை அள்ளித் தரும் ஸ்ரீஅரசாலை(சொர்ண வராகி) வழிபாடு!!!


தொடர்ந்து 27 பவுர்ணமி நாட்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அல்லது இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீஅரசாலையை வழிபட்டால்,மகத்தான செல்வ வளம் நம்மைத் தேடி வரும் என்பதை எமது குருவின் உபதேசத்தின் பெயரில் உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;

நம்மில் பலர் தினசரி அன்னை அரசாலையின் 12 பெயர்களை ஜபித்து வருகிறோம் அல்லவா?


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

அவர்கள் அனைவருமே 16 தேய்பிறை பஞ்சமி நாட்களில் இரவு ஒரு மணிநேரம் தொடர்ந்து இந்த 12 பெயர்களை வீட்டில் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் ஜபித்து வரலாம்;ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்கு இந்த 12 பெயர் ஜபமே செல்வ வளத்தை,வேலை வாய்ப்பைத் தந்துவிடும்;

சிலருக்கு திருமணத் தடை இருக்கும்;அது நீங்கிவிடும்;

சிலருக்கு வராக்கடன் இருக்கும்;அது திரும்பக் கிடைத்துவிடும்;

சிலருக்கு ஊரெல்லாம் கடன் வாங்கியிருப்பர்;அவர்களுக்கு அந்தக் கடன் களை தீர்க்கும் சந்தர்ப்பம் அமையத் துவங்கும்;

சிலருக்கு திருமணம் ஆகி,பல ஆண்டுகள் ஆகியிருக்கும்;ஆனால்,குழந்தை இல்லையே? என்ற ஏக்கம் இருக்கும்;அன்னை அரசாலை(வராகி)யின் 12பெயர்களை ஜபிக்க ஆரம்பித்ததும்,அந்த குறை நீங்கியிருக்கும்;

குறைந்த பட்சம் 108 நாட்கள் தொடர்ந்து ஜபித்திருந்தால் இவைகளெல்லாம் நடைபெற்றிருக்கும்;


சிலருக்கு 200 நாட்கள்,300 நாட்கள் ஆகியிருந்தாலும் ஒன்றுமே நடக்காமல் விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளியிருக்கும்;அவர்கள் ஜாதகப்படி கடுமையான கர்மவினைகள் இருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம்;

அப்படிப் பட்டவர்கள் தினமும் அன்னை அரசாலையின் 12 பெயர்களை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்;மேலும்,ஒவ்வொரு தேய்பிறை பஞ்சமி இரவிலும் ஒருமணி நேரம் வீட்டில் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் ஜபிக்க வேண்டும்;

கூடவே,ஒவ்வொரு பவுர்ணமி இரவன்றும் அன்னையின் 12 பெயர்களை ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;

தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு தவிர்த்து உலகின் பல ஆலயங்கள்,மடங்கள்,ஆசிரமங்கள்,சத்சங்கங்களில் பவுர்ணமி பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;அங்கே ஒரு மணி நேரம் அன்னை அரசாலை(வராகி)யின் 12பெயர்களை ஜபிப்பது நன்று;

தொடர்ந்து 27 பவுர்ணமி இரவுகள் இப்படி அன்னை அரசாலை(வராகி)யை வழிபட வேண்டும்;இதில் முதல் 9 பவுர்ணமிகள் வழிபாடு செய்துகொண்டிருக்கும் போதே,எம்மை நேரில் சந்திப்பது அவசியம்;அதன் மூலமாக ஸ்ரீசொர்ண வராகி வழிபாட்டுமுறையை தங்களுக்கு போதிக்கும் சந்தர்ப்பத்தை அன்னை அரசாலை(வராகி) அருளுவாள்;தொலைதூரங்களில் இருப்பவர்கள் மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்வது அவசியம்;

பவுர்ணமி நாட்களின் பட்டியல் இதோ:இந்த நாட்களின் இரவில் அன்னை அரசாலை(வராகி)யை வழிபடவும்:

21.4.2016 வியாழன்
20.5.2016 வெள்ளி நள்ளிரவு 1.33 முதல் 21.5.2016 சனி பின்னிரவு(ஞாயிறு விடிகாலை)3.17 வரை;
18.6.2016 சனி
19.7.2016 செவ்வாய்
16.8.2016 செவ்வாய்
15.9.2016 வியாழன் வியாழன் இரவு 2.58 முதல் 16.9.2016 வெள்ளி இரவு 1.16 வரை;
14.10.2016 வெள்ளி
13.11.2016 ஞாயிறு
12.12.2016 திங்கள்
10.1.2017 செவ்வாய்
9.2.2017 வியாழன்
11.3.2017 சனி
9.4.2017 ஞாயிறு

இதில் 13 பௌர்ணமிகளைக் குறிப்பிட்டிருக்கின்றோம்;அடுத்த பவுர்ணமி நாட்களை டிசம்பர் 2016 இல் வெளியிடுவோம்;

இனி எப்போதும் மனிதப் பிறவி வேண்டாம் என்ற நோக்கத்தில் தான் நம்மில் பலர் இங்கே பிறந்திருக்கின்றோம்;ஆனால்,அந்த நோக்கத்தை நோக்கிச் செல்லவிடாமல் நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மாக்கள் தடுக்கின்றன;இது புரியாமல் நம்மில் பலர் இறைசக்தியை திட்டிக்கொண்டும்,சபித்துக் கொண்டும் இருக்கின்றோம்;இப்படி செய்யலாமா?

பதிலாக,பிறப்பற்ற முக்தியை அடைய முதலில் நாம் ஒவ்வொருவரும் பொருளாதாரத் தன்னிறைவை எட்டுவோம்;அப்படி எட்டுவதற்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகளும்,அதிகபட்சம் சிலபல ஆண்டுகளும் ஆகும்;அதன் பிறகு இறைசக்தியுடன் கலப்பதற்குரிய சூட்சும வழிமுறைகள் நம்மைத் தேடிவரும்;

அன்னை அரசாலை(வராகி)யின் கருணைக்குப் பாத்திரமானால் இவை அனைத்தும் நடைபெற்றே தீரும்;

இந்த பவுர்ணமியில் இருந்தே அன்னை அரசாலையை வழிபடத் துவங்குவோம்!


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment