Tuesday, April 26, 2016

நமது கர்மவினைகளைப் போக்கும் தேய்பிறை பஞ்சமி ஜபம்!!!






உலகம் இன்று எதிலும் வேகம்,எங்கும் வேகம் என்று போய்க் கொண்டிருக்கின்றது;அதனால்,எந்தக் கடவுளை வழிபட்டால் பலனும் வேகமாகக் கிடைக்கும்? என்று ஏங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது;


அரசியல்,ஆன்மீகம்,தொழில்துறை,குடும்பம்,உறவுகள்,நட்பு வட்டம் என எங்கும் எதிலும் போட்டி மனப்பான்மை குறைந்து போய் பொறாமையும் அதனால் தனக்கு நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை;தன்னுடன் பழகுபவர்கள் நன்றாக வாழக் கூடாது என்ற மனோபாவம் இன்று நாடு முழுவதும்,வீடுகள் தோறும் பரவியிருக்கின்றது;


மறுபக்கம் தான் உண்டு;தனது வேலை/தொழில் உண்டு என்று வாழ்ந்து வருபவர்களுக்கு இந்த பொறாமை எண்ணத்தை எதிர்கொள்ளத் தெரியாமல் தத்தளிக்கின்றனர்;பொறாமையின் உச்சமாக ஒருவரது வேலை/தொழிலில் இடைஞ்சல்/அவமானம்/நஷ்டத்தை உருவாக்கி ரசிக்கும் குரூர எண்ணம் ஆன்மீகத்தில் இருப்பவர்களிடமும் ஊடுருவி இருக்கின்றது;இதை அவ்வளவு சுலபத்தில் நம்மால் கண்டறிய முடியாது;


மனதால் பிறருக்குத் தீங்கு நினைக்காமல் தான் உண்டு,தனது வேலை/தொழில் உண்டு என்று வாழ்பவர்களுக்கு மறுவிநாடியே பாதுகாப்பு தரும் ஒரே மஹாசக்தி அன்னை ஆதி வராகி மட்டுமே!

மனதெல்லாம் நயவஞ்சகத்தையும்,பொறாமையையும் வைத்துக் கொண்டு அன்னை ஆதி வராகிக்கு பல ஆயிரம் ரூபாய்கள் அல்லது  பல லட்ச ரூபாய்கள் செலவில் பூஜை,அபிஷேகம் செய்துவிட்டால் செய்த தவறுகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால்,அந்த கருணை மாதாவின் அருட்பார்வை கூட கிட்டாது;

பிறரின் மாந்திரீகத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு,அப்படி பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட தெரியாத அபலைகள் பின்வரும் அன்னை ஆதி வராகி என்ற மங்கள மகா காளியின் 12 பெயர்களை அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!) ஜபித்து வரவேண்டும்;





ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் மற்றும் மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் இந்த 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;அதிகாலையில் ஜபிக்க இயலாதவர்கள்,மதியம் 12 மணிக்குள் உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் ஜபிக்க வேண்டும்;

இன்று 26.4.16 தேய்பிறை பஞ்சமியாக இருப்பதால்,இன்றே ஆரம்பிப்பது மிகவும் நன்று;இன்று முதல் தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும் ஜபித்து வரவேண்டும்;

31 வது நாளில் இருந்து காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

61 வது நாளில் இருந்து காலையில் 45 நிமிடமும்,இரவில் 45 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

91 வது நாளில் இருந்து 1008 வது நாள் வரையிலும் காலையில் 60 நிமிடமும்,இரவில் 60 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

61 வது நாளில் இருந்து முதல் 20 நிமிடங்களுக்கு அன்னையின் 12 பெயர்களையும்,அடுத்த 20 நிமிடங்களுக்கு வராகி பரணி(வராகி மாலை/வராகி அந்தாதி)யை ஒருமுறையும் ஜபிக்க வேண்டும்;

அன்னைக்கு விருப்பமான நிறம் பச்சை;எனவே,பச்சை நிறத்துண்டின் மீது,கிழக்கு அல்லது வடக்கு நோக்கியவாறு அமர்ந்து ஜபிக்க வேண்டும்;பச்சை நிறத்துண்டின் மீது அமர்ந்து தொடர்ந்து ஜபித்து வந்தால்,நமது வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்வதுடன்,பண வரவு அதிகரிக்கத் துவங்கும்;

தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமி நாட்களில் அன்னை ஆதிவராகியை ஜபித்து வந்தால்,எப்பேர்ப்பட்ட கர்மவினையாக இருந்தாலும் அதில் இருந்து மீட்டு நம்மை தனது குழந்தையாக பாதுகாப்பவள் அன்னை ஆதிவராகி!

இந்த உலகத்தில் எப்பேர்ப்பட்ட துஷ்டப் பிரயோகங்கள் ஒருவர் மீது ஏவப்பட்டாலும்,அதில் இருந்து மீட்டு முழுப் பாதுகாப்பு தருவது அன்னை ஆதிவராகியின் அருள் மட்டுமே!

அசைவம்,மது இவை இரண்டையும் கைவிட்டவர்களுக்கு அன்னை ஆதிவராகியின் அருள் விரைவாகக் கிட்டும்;

ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்களுக்கும்,பரணி,திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்களுக்கும்,நிம்மதியாக நமது வேலையைப் பார்க்க மாட்டோமா? என்று ஏங்குபவர்களுக்கும் அன்னை ஆதிவராகியின் அருள் உடனடியாகக் கிட்டும்;


அன்னை ஆதிவராகியை தினமும் ஜபிப்பவர்களுக்கு சத்ரு பயம் சிறிதும் இராது;

நள்ளிரவு நேரத்தில் தனியாக நடந்து வரக்கூடிய சூழ்நிலை உண்டானாலோ,தூங்கும் போது யாராவது நம் மீது அமர்ந்து கொண்டு நம்மை அழுத்துவது போன்ற உணர்வு உண்டானாலோ ஸ்ரீவராகி,ஸ்ரீவராகி என்று நினைத்தாலே போதும்;அந்த துஷ்டசக்திகள் உடனே ஓடிவிடும்;

ஒவ்வொரு நாளும் ஸ்ரீவராகி என்றோ அல்லது வராகி சகாயம் என்று கூறி அந்த நாளை ஆரம்பிக்க வேண்டும்;அப்படிச் செய்தால் அந்த நாளின் ஒவ்வொரு செயலும் வெற்றிகள் நிரம்பியதாக மட்டுமே இருக்கும்;

தினமும் இரவுப்பொழுதில் அன்னை ஆதிவராகியின் சன்னதியில் இந்த 12 பெயர்களை ஜபிப்பது நன்று;

தமிழ்நாட்டில் அன்னை ஆதிவராகிக்கு என்று தனி சன்னதிகளும்,தனி ஆலயங்களும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன;எனவே,சிவாலயத்தில் சிவன் சன்னதியின் முன்பாக சிறிது நேரமும்,அம்பாள் சன்னதியின் முன்பாக சிறிது நேரமும்(குறைந்தது 30 நிமிடம்) ஜபித்து வரவேண்டும்;இதனால்,பலரது நீண்டகால சிக்கல்கள் சில நாட்களில் தீர்ந்திருக்கின்றன;சிலருக்கு சில வாரங்களில் தீர்ந்திருக்கின்றன;ஈசனும்,அம்பிகையும் இணைந்த ஒரே வடிவம் அன்னை ஆதிவராகியே!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ப்ருஹத் வராகியாக அருளாட்சி புரிந்து வருகிறாள்;

இராமநாதபுரம் அருகில் இருக்கும் உத்திரகோசமங்கையில் மங்கள மகாகாளி என்ற ஆதிவராகியாக அரசாட்சி புரிந்து வருகிறாள்;

காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்திற்கும் நடுவே பள்ளூரில் அரசாலை என்ற பெயரில் அருள்மழை புரிந்து வருகின்றாள்;

திருச்சி திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரியாக அன்னை வராகியே அருள்பாலித்து வருகின்றாள்;

மதுரையில் மீனாட்சியாக பாண்டிய நாட்டு மக்களுக்கு படியளந்து வருகின்றாள்;

ஒட்டு மொத்த பாரத தேசத்திற்கும் பாரதமாதாவாக இருந்து நம் அனைவரையும் பாதுகாத்து வருகின்றாள்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்

No comments:

Post a Comment