Monday, April 18, 2016

பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேரவும்,அப்படி ஒன்றிணைந்தப் பின்னர் ஒரு போதும் பிரியாமல் இருக்கவும் ஜபிக்க வேண்டிய பாடல்!


கேள்வி:கருத்து வேறுபாட்டினால் பிரிந்த தம்பதியை எப்படிச் சேர்ப்பது?
பதில்:இருவரையும் தனித்தனியாக சந்தித்து,அவர்கள் மனம் எப்படி காயப்பட்டிருக்கின்றது? என்பதைக் கண்டறிந்து சரி செய்யலாம்;

அல்லது

ஒருவர் அல்லது ஒரு குழுவினர்(கணவனின் குடும்பத்தார் அல்லது மனைவியின் குடும்பத்தார்) இருவரிடமும் தனித்தனியாகப் பேசினால் பிரிவுக்கான காரணத்தைக் கண்டறியமுடியும்;பிறகு,அதைச் சீரமைக்கவும் செய்யலாம்;

ஆனால்,இன்றைய காலகட்டத்தில் (2016) எந்த ஒரு பஞ்சாயத்தாக இருந்தாலும் சரி;நடுவர்களாக வருபவர்களும் அல்லது இருதரப்புக்கும் நடுவில் இருப்பவர்களும் தனக்கு ஆதாயம் தராத எதையும் செய்வதில்லை என்பதுதான் கொடுமையான விஷயம்;

எனவே,பக்திமார்க்கமே சிறந்தது!

கேள்வி:பக்தி மார்க்கமா?

பதில்:ஆமாம்! மனப்பூர்வமான முயற்சி ஒரு தொழிலில் மட்டும் வெற்றியைத் தரும் என்று தான் நாம் நினைக்கிறோம்;

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு சாதனையையும் நமது உணர்ச்சிகளும்,உணர்ச்சிவசப்பட்டு செய்யும் முயற்சிகளுமே அதன் பின்னால் இருந்து இயக்குகின்றன;சிறு சிறு சாதனைகளே,மகத்தான ஒரு சாதனையை சாதிக்க வைக்கின்றன;

கிரிக்கெட்டில் சாதித்தாலும் சரி;சினிமாவில் சாதித்தாலும் சரி;பிரபலமான எழுத்தாளராக இருந்தாலும் சரி;அவர்களின் வைராக்கியமான மனமும்,உணர்வுகளை ஒரு லட்சியத்தை நோக்கி குவிப்பதுமே சாதிக்க வைத்துள்ளன;

கேள்வி;எப்படி பிரிந்த தம்பதியை பக்தி மார்க்கத்தின் மூலமாக  ஒன்று சேர்ப்பது?

பதில்:பிரிந்த தம்பதியில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் மட்டும் இந்த முயற்சியில் ஈடுபட்டால் போதுமானது; இந்த முயற்சியில் ஈடுபடும் போது அசைவம்,மது இரண்டையும் தவிர்க்க வேண்டும்;அப்போதுதான் பக்தி முயற்சி வெற்றியைத் தரும்;

பின்வரும் அபிராமி பட்டர் இயற்றிய பாடலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் அம்மன் கோவிலில் 21 முறை ஜபிக்க வேண்டும்;

அம்மன் கோவில் இல்லாத பட்சத்தில் சிவாலயத்தில் இருக்கும் அம்பாளின் சன்னதியில் 21 முறை ஜபிக்கலாம்; 

கோவில்கள் இல்லாதஇடமாக இருப்பின் அபிராமி படத்தின் முன்பாக ஜபிக்கலாம்; ஜபித்து முடித்ததும்,ஏழைக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களும்,இனிப்புப் பண்டங்களும் வாங்கித் தரவேண்டும்;


மனக்கசப்பாகி பிரிந்த கணவன்/மனைவி திரும்பி(திருந்தி) வரும் வரையிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இவ்வாறு ஜபிக்க வேண்டும்;


ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினும்
தானந்தமான சரணாகர விந்தம் தவள நிறக்
கானந்தம் ஆட ரங்காம் எம்பிரான் மூடிக் கண்ணியதே;



எப்படி சம்ஸ்க்ருதம் மந்திரமொழியோ,அதே போல தமிழும் மந்திரமொழியே! இரு மொழிகளுமே பாரதமாதாவின் இரு கண்கள்! இதைப் புரியாதவர்கள் தான் ஆங்கிலத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகின்றனர்;

No comments:

Post a Comment