Tuesday, April 12, 2016

முழு யோகம் தரும் கேது காலம்!!!


ராகு காலம் நம் அனைவருக்கும் தெரியும்;ராகு காலத்தில் எந்த ஒரு சுபகாரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாது;அப்படி ஆரம்பித்தால்,அது வெற்றியைத் தராது;என்பது பல நூற்றாண்டுகளாக  நிரூபிக்கப்பட்ட ஜோதிட+ஆன்மீக உண்மை;


அதேசமயம்,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றால் அல்லது ராகுவுடன் ஒரு கிரகம் இணைந்திருந்து அந்தக் கிரகத்தில் திசை நடைபெற்றால் அல்லது ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை/சுவாதி/சதயம் நட்சத்திரங்களில் ஒரு கிரகம் நின்று திசை நடத்தினால் அவர்களுக்கு ராகு காலம் மிகுந்த யோகம் தரும் காலம் ஆகும்;(அனுபவம் பேசுகிறது);திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கும்;சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கும்;சதயம் நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் யோக காலமாகவே இருக்கிறது;


சிலருக்கு இராகு முதல் 9 ஆண்டுகள் கெடுதியையும்,அடுத்த 9 ஆண்டுகளில் நன்மையையும் தருவதும் உண்டு;
ராகு மஹாதிசை பலருக்கு கோடீஸ்வர யோகத்தைத் தருகின்றது;அப்படி மகத்தான செல்வ வளம் வரும் போது,ஒரு போதும் அந்த ராகு மஹாதிசை நடைபெறும் நபரின் பெயரில் சொத்துக்கள் வாங்கக் கூடாது;மீறினால்,ராகு மஹாதிசையின் இறுதி மூன்று ஆண்டுகளில் அனைத்தையும் இழக்க வைப்பார்;


ராகுவுக்கு நேர் எதிர்க் கிரகம் கேது;
ராகு தனது மஹாதிசை 18 வருடங்களில் முதல் பாதியான 9 ஆண்டுகளில்  யோகங்களை அள்ளிக் கொடுப்பார்;அடுத்த பாதியான 9 ஆண்டுகளில் அந்த யோகங்களை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கவும் செய்வார்;அதனால் தான் ராகு கொடுத்துக் கெடுப்பார் என்ற ஜோதிட அனுபவ உபதேசம் நமக்குக் கிடைத்திருக்கிறது;


கேது தனது மஹாதிசை 7 வருடங்களில் முதல் பாதியான மூன்றரை ஆண்டுகளில் அது இருக்கும் இடத்தைக் கெடுப்பார்;பைத்தியம்,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லை அல்லது அனாவசியமான உயிர் பயத்தைத் தருவார்;அடுத்த மூன்றரை ஆண்டுகளில் அதற்கு எதிரான சூழ்நிலையைத் தருவார்;அதாவது,சித்தர் தொடர்பு,கோவில் வழிபாடு,இறைசக்தியின் அருளைப் பெறுதல்,ஞானமார்க்க ஈடுபாடு போன்றவைகளில் கொண்டு போய்விடுவார்;சிலருக்கு இது மாறியும் நடைபெறும்;முதல் மூன்றரை ஆண்டுகளுக்கு ஞான மார்க்க ஈடுபாடு,சித்தர்த் தொடர்பு என்று இருக்க வைத்துவிட்டு,அடுத்த மூன்றரை ஆண்டுகளில் பைத்தியமான மனநிலை,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லையைத் தருவதும் உண்டு;ஜோதிட அனுபவத்தில் கண்டறிந்தது இது;


கிழமைகள் 7! ஆனால் கிரகங்களோ 9!!
ராகுவுக்கும்,கேதுவுக்கும் கிழமைகள் இல்லை;அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒரு முகூர்த்தநேரம் வரை(90 நிமிடங்கள்) ராகு காலம் செயல்படுகின்றது;இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஜோதிட ஞானம் உள்ளவர்கள்,எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய மாட்டார்கள்;எப்படி ராகு விஷமான கிரகமோ,அதே போல ராகு காலமும் விஷத்தன்மை நிரம்பிய நேரமாக செயல்படுகின்றது;இந்த உண்மையை இந்துக்களாகிய நாம் கடந்த 20,00,000 ஆண்டுகளாக அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்;வெறும் 2016 ஆண்டுகள் வயதுடைய கிறிஸ்தவத்தால் இதைப் புரிந்து கொள்ள முடியுமா?


ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை

திங்கட்கிழமை ராகு காலம் காலை 7.30 முதல் 9 மணி வரை

செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை

புதன்கிழமை ராகு காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை

வியாழக்கிழமை ராகு காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை

வெள்ளிக்கிழமை ராகு காலை காலை 10.30 முதல் 12 மணி வரை

சனிக்கிழமை ராகு காலம் காலை 9 முதல் 10.30 மணி வரை
இதே போல,கேது காலம் என்று ஒன்று உண்டு;



கேது காலமும் ஒரு முகூர்த்தகாலம் வரை செயல்பட்டு வருகின்றது;ராகு காலம் முழு விஷ காலமாக இருப்பதால்,கேது காலம் முழு யோகம் தரும் மற்றும் சுபக்காரியங்களுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது;

ஞாயிற்றுக்கிழமை கேது காலம் இரவு 10.30 முதல் 12 மணி வரை
திங்கட்கிழமை கேது காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை
செவ்வாய்க்கிழமை கேது காலம் இரவு 9 முதல் 10.30 மணி வரை
புதன்கிழமை கேது காலம் மாலை 6 முதல் 7.30 மணி வரை
வியாழக்கிழமை கேது காலம் இரவு 7.30 முதல் 9 மணி வரை
வெள்ளிக்கிழமை கேது காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை
சனிக்கிழமை கேது காலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை

கேது ஒரு சுபக்கிரகம் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது;உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய கேது காலத்தைப் பயன்படுத்துங்கள்;சகல வெற்றிகளையும் அடையுங்கள்;

ராகு காலம் பிரபலமாக இருப்பதைப் போல,கேதுகாலமும் பிரமடையும் என்பதை தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவரும்,சித்த மருத்துவத்தின் தலைமை மருத்துவருமாகிய அகத்தியமகரிஷி தெரிவித்திருக்கின்றார்;

ராகு காலத்தில் இருந்து சரியாக 6 மணி நேரம் அதிகப்படுத்தினால் வருவது கேது காலம் என்பதை உணருங்கள்;

கேது காலத்தைக் கணித்து எழுதியவர்:திரு.எஸ்.எம்.நெப்போலியன்,ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம்;


நன்றி:பக்கம் 59,60;ஞானசிந்தாமணி,தாரண ,ஆடி 2004

No comments:

Post a Comment