சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் 42 க்கும் மேற்பட்ட பிராமண,ஐயர்,ஐயங்கார்
குடும்பங்கள் ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட வரலாற்றை ஒரு புத்தகமாகவே
தொகுத்து வெளியிட்டுள்ளனர்:அந்த புத்தகத்தின் பெயர்;தலித்துகளும் பிராமணர்களும்;எழுதியவர்:
கே.சி.லட்சுமி நாராயணன்,மூத்த பத்திரிகையாளர்
கோபிச்செட்டிப்பாளையம் ஜி.எஸ்.லட்சுமண ஐயரின் தந்தை சீனுவாச ஐயர் மகாத்மா
காந்திஜியின் கட்டளைப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை தமது இல்லத்திற்கு அழைத்து
உபசரித்ததால் சாதிவிலக்கத்திற்கு ஆளானார்;(1940களில்)
லட்சுமண ஐயர் காந்திஜியின் நினைவாக ஹரிஜனசேவா நிலையத்திற்கு ஐந்தரை ஏக்கர்
நிலத்தை நன்கொடையாக அளித்தவர்;லட்சுமண ஐயரின் சொத்தாக 300 ஏக்கர் இருந்தது;லட்சுமண
ஐயரின் மனைவி லட்சுமி அம்மாள் தனது கணவரின் தீண்டாமை ஒழிப்பு பணிக்கு துணை நின்று கோபி
மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக எட்டு ஏக்கர் என்று தொடங்கி சமூக நன்மைக்காக
தங்கள் நிலங்களைக் கொடுத்துவிட்டு,வெறும் 25 ஏக்கர் மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்ட
பெருந்தகையாளர்;
தஞ்சைமாவட்டம் அம்மாப்பேட்டை வேங்கடராம ஐயர்,தீண்டாமை ஒழிப்புப் பணியில்
தீவிரமாக ஈடுபட்டு,தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல மாணவர்கள் கல்வி கற்கவும்,வாழ்க்கையில்
முன்னேறவும் உதவியவர்;இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்;இவரை காமராஜரும்,ராஜாஜியும்
பாராட்டியுள்ளனர்;
இவரைப் போன்றே எஸ்.என்.சோமையாஜீலு என்ற பிராமணர் சாதிக் கொள்கைக்கு சாவு
மணி அடிப்பதே எனது கொள்கை என்று முழங்கியவர்;மனிதரில் பிறப்பினால் உயர்ந்தவர்,தாழ்ந்தவர்
இல்லை என்று அவர் தேசிய மேடைகளில் முழங்கியவர்;தீண்டத்தகாதவர்களையும் கோவிலுக்குள்
விடவேண்டுமென்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலயப் பிரவேசப் போராட்டத்தை நடத்தி வெற்றி
கண்டவர் சோமையாஜீலு,
அதே போல் என்.எஸ்.வரதாச்சாரியார்;பெருமளவு வருமானம் தரக்கூடிய வக்கீல்
தொழிலை விட்டுவிட்டு,சபர்மதி ஆஸ்ரமத்தில் பத்து ஆண்டுகள் தங்கி,விடுதலை இயக்கத்திற்காகவும்,தாழ்த்தப்பட்ட
வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரவும் அவர் தன்னை தியாகம்
செய்து கொண்டவர்;
பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் ஹரிஜன மக்களின் ஒப்பற்ற பெருந்தலைவர்;தனது
இளவயதில் ரமாபாய் என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டவர்;அந்த அம்மையார் நோய்வாய்ப்பட்டு
இறந்த பிறகு,தனிமையில் வாழ்ந்தார்;
ஓய்வே இல்லாத பொதுப்பணிகளின் விளைவாக,நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,அங்கே டாக்டர் சாரதா என்பவர் துணையாக இருந்தார்.அவர்
தனது 56 வது வயதில் இந்த டாக்டர் சாரதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.அந்த டாக்டர்
சாரதாவும் பிராமண வகுப்பில் பிறந்தவர்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்;
தீண்டத்தகாதவர்கள் என்று அலட்சியமாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு கோவிலுக்குள்
நுழைந்த இறைவனை கும்பிடும் உரிமையை 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே மகிழ்ச்சியுடன் வழங்கிய
ராமானுஜர் ஹரிஜன பெருமக்களின் உண்மையான நண்பர்;
கோவிலுக்குள் ஹரிஜனங்கள் செல்லலாம் என்று சட்டம் இயற்றி,கோவில்களை அவர்களுக்காக
திறந்துவிட்டவர் சி.பி.ராமசாமி ஐயர்.
தீண்டத்தகாதவர் என்று கூறப்பட்ட ஒருவருக்கு அன்றைய சென்னை மாகாணத்தில்
முதன் முதலாக மந்திரி அளித்த ராஜாஜி ஹரிஜனங்களின் உண்மையான நண்பர்;
தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு சிறுவனைத் தத்தெடுத்து,வளர்த்து
ஆளாக்கி,உருவாக்கினவரும் உணவு விடுதிக்குள்ளே தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது என்று
இருந்த காலத்தில்,ஹரிஜன ஓட்டல் பிரவேசத்தை நிகழ்த்திக் காட்டியவருமான பி.எஸ்.கிருஷ்ணசாமி
ஐயங்கார் ஹரிஜனங்களின் உண்மையான நண்பர்;
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதன் முதலில் ஹரிஜன மக்களை அழைத்துச்
சென்று ஆலயப் பிரவேச நிகழ்ச்சியை நடத்திக்காட்டியவர் மதுரை ஏ.வைத்திய நாத ஐயர்;இந்தச்
சம்பவம் நிகழ்ந்து 80 ஆண்டுகள் ஆகின்றன;
திரைப்படங்களில் ஹரிஜன மக்களுக்காக
பாடல்கள் எழுதிய பாபநாசம் சிவன்,கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் ஹரிஜனங்களின் நண்பர்கள்;
தலித் என்பது அரபுச்சொல்லாகும்;ஹரிஜன் என்பது நமது மொழிச்சொல்லாகும்;தலித்
என்ற வார்த்தையை திரும்பத் திரும்பப் பயன்படுத்தி தேசிய அளவில் பிரபலப்படுத்தி,ஹரிஜன்
என்ற வார்த்தையையே நம்மிடம் இருந்து மறைத்த கம்யூனிஸ்டுகள் ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்கு
இதைத் தவிர வேறு ஏதாவது செய்தார்களா?
நன்றி:வார்த்தாளி விஜயம்,பக்கம் 11,12,13;வெளியீடு பிப்ரவரி 2016
No comments:
Post a Comment