தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.
பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.
நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் வருத்தங்கள் ஆகியவையே நம்மை வளரச்செய்கின்றன.
விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் குழந்தையே வெற்றி.
ஒருவரின் தோல்விகளின் மூலம் உங்களால் அவரை அளவிட முடியாது.
நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை.
ஒரு வலிமையான, வெற்றிகரமான மனிதன் தனது சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுபவன் அல்ல; அவன் தனக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கிக்கொள்கிறான்.
அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்; பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி, அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள்.
“உங்கள் வாடிக்கையாளரின் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள்” என்பதே ஒவ்வொரு தொழிலதிபருக்குமான சிறந்த விதி.
அதிகமாக பெறுவதற்கு, கண்டிப்பாக நாம் அதிகமாக கொடுக்கவும் வேண்டும்.
பெரும்பாலான மனிதர்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் தோல்விகளை எதிர்கொண்டதாலேயே இறுதியில் வெற்றி பெறுகின்றார்கள்.
நமது எண்ணங்கள் மற்றும் கற்பனை ஆகியவை மட்டுமே நமது சாத்தியக் கூறுகளுக்கான உண்மையான வரம்புகளாகும்.
ஒரு சரியான அமைப்பு, இலக்கை அடைவதற்கான தூரத்தின் அளவை குறைக்கும்.
No comments:
Post a Comment