Thursday, January 6, 2011

delay but real of communisum

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை ஒட்டி தமிழ்நாட்டின் அரசியல்தலைவர்களில் ஒருவரான வை.கோ.அவர்கள் விடுத்த அறிக்கை:







அமெரிக்க அதிபரின் வருகைக்கு ஆவேசமாக எதிர்ப்பைக் காட்டும் இடதுசாரிகளுக்கு(கம்யூனிஸ்டுகளுக்கு) கேள்விகள்:






போபால் விஷவாயுவால் ஏராளமான இந்திய சகோதர சகோதரிகள் உயிரிழந்தார்கள்.அந்த நிறுவனத்தின் அதிபர் பத்திரமாக அனுப்பிவைக்க காங்கிரஸ் கட்சி உதவியது.அதற்காக காங்கிரஸ் அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை ஏன் நடத்தவில்லை?






ஆப்கானிஸ்தானில் அங்கிருந்த அரசை கவிழ்த்துவிட்டு பொம்மை அரசை உருவாக்கி,சோவியத் யூனியன் தனது படைகளை ஆப்கானிஸ்தானில் கொண்டுபோய் நிறுத்தியது.அதற்கு இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்தார்களா?






இந்தியாவின் ஒரு பகுதியாகிய அருணாச்சலப்பிரதேசத்தை இந்தியப்பகுதியாக ஏற்காமல் தங்கள் பகுதி என்று சீனா தனது வரைபடத்தி வெளியிட்டு உள்ளதற்கு சீன அரசை கம்யூனிஸ்டுகள் கண்டித்தது உண்டா?






காஷ்மீரில் இருந்து சீனா செல்பவர்களுக்கு சீனா விசா முத்திரை வைக்காமல் தனிச் சீட்டில் கொடுப்பதற்கு,சீனப்பிரதமர் வென் ஜியாபோ இந்தியா வருகிறபோது இடதுசாரிகள் நாடெங்கும் கண்டனப்போராட்டம் நடத்திட முன்வருமா?






ஆன்மீகக்கடல் வாசகர்களே! கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி உலகமயமானது என்பதை உணரவே இந்த அறிக்கை!!!

No comments:

Post a Comment