Monday, January 31, 2011

இன்று மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாள்






தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளன்று சில உண்மைகளை உங்களிடம் உரைக்க விரும்புகிறேன்.

மகாத்மா காந்தி எனப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் நமது நாட்டின் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களில் முக்கியமானவர்.இந்த நாளில் நாதுராம் விநாயக் கோட்சே என்பவன் அவரை சுட்டுக்கொன்றான்.இதுமட்டுமே நாம் அறிந்துள்ள வரலாறு.



இங்கிலாந்து நமக்கு சுதந்திரம் தரும் முன்பாகவே,யார் பிரதமராக வருவது என்ற கோஷ்டி சண்டை ஆரம்பித்துவிட்டது.இந்த சண்டை இன்று இந்தியாவில் இருக்கும் 540 மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினரிடம் பரவி யிருக்கிறது.அது போகட்டும்.

ஒருவழியாக நேரு பிரதமரானார்.அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.மீது ஒரு சந்தேகம்.இவர்கள் எங்கே நம்மை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோ? என்று.மகாத்மா காந்தியின் மரணத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டார்.காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.தான் என வதந்தி பரப்பி,இந்திய மக்களை ஆர்.எஸ்.எஸ்.ஸீக்கு எதிராக திருப்பினார்.

சரி! நாதுராம் விநாயக் கோட்சேயின் வாக்குமூலத்தை ஏன் இந்த காங்கிரஸ் கட்சி ஐம்பது ஆண்டுகளாக வெளியிடவில்லை?அப்படி வெளியிட்டால்,அன்றே காங்கிரஸ் கட்சி கட்டெறும்பாக தேய்ந்து இன்றைய கம்யூனிஸ்டு கட்சியாக சிறுத்துப்போயிருக்கும்.

நாதுராம் விநாயக் கோட்சே என்ற பெயரில் இஜட்.ஒய்.ஹிம்ஸாகர் என்பவர் எழுதி தமிழில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது.குமரி பதிப்பகம்,8,நீலா தெற்குவீதி,நாகப்பட்டிணம்,தமிழ்நாடு என்ற பதிப்பகம் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறது.

இந்த புத்தகத்தில் காந்தியை சுட்டுக்கொன்றதும்,கோட்சேயை காவல்துறை கைது செய்தது;நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.கோட்சேவின் குமுறல்களை தனது வாக்குமூலமாக பதிவு செய்தது.மனித தர்மப்படி கோட்சேவின் குமுறல்கள் நியாயமானவை.இந்திய சட்டப்படி?

கோட்சேவின் குமுறல்களை இன்றுவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை;அப்படிக் கண்டுகொண்டிருந்தால்,மும்பையில் தாஜ் ஹோட்டலில்;வி.டி.ரயில்வே நிலையத்தில்; நமது மதிப்பு மிக்க பாராளுமன்றத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கமாட்டார்கள்.

இன்றும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை தாஜா செய்யாமலிருந்து,நிஜமான இந்து முஸ்லீம் ஒற்றுமை அரசியல் தளத்திலும் உருவாகியிருக்கும்.கோடிகளை காங்கிரஸ் கொள்ளையடித்திருக்காது.ஒருமுறை இந்த புத்தகத்தை வாங்கிப் படித்துப்பாருங்கள்.காங்கிரஸின் சுயநல சொரூபம் புரியும்

No comments:

Post a Comment