Sunday, January 23, 2011

துவாதசி திதி வரும் நாட்களும்,அண்ணாமலை அன்னதானமும்




கலிகாலத்தில் வாழும் நாம் மற்றும் நமது முன்னோர்களின் புண்ணியங்களையும் பாவங்களையும் சேர்த்தேதான் நமது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறோம்.அதேசமயம்,பல வம்சவளியில் ஏதாவது ஒரு நோய் அல்லது கடன் அல்லது குடும்பப்பிரிவினை அல்லது திருமணம் ஆகாமலிருப்பது என ஏதாவது ஒரு கடுமையான கர்மம் நம்மை சோகத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது.இப்படிப்பட்ட கடுமையான கர்மங்களை இந்த கலியுகத்தில் நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும்,மந்திர ஜபத்திற்கும் மட்டுமே உண்டு.மந்திரஜபத்திற்கு நமது இன்னொரு வலைப்பூவாகிய www.omshivashivaom.blogspot.com ஐ அணுகவும்.நமது சொந்த ஊரில் அன்னதானம் செய்தாலே நமது கர்ம வினைகள் படிப்படியாக குறையத்துவங்கும்;அன்னதானத்திலேயே மிகவும் உயர்வானது அண்ணாமலை அன்னதானம் ஆகும்.அந்த அண்ணாமலை அன்னதானத்தை துவாதசி திதி ஒரே ஒரு முறை செய்து நமது கர்மவினைகளை ஒரே தடவையில் நீக்கவே எனது தமிழ்மக்களுக்காக இந்த ஜோதிடக்கட்டுரை!



காசியில் ஒருவருக்கு இடப்படும் அன்னதானமானது மற்ற இடங்களில் ஒரு லட்சம் பேர்களுக்கு அளிக்கப்படும் அன்னதானத்தை விட உயர்வானது;ஆனால்,திருஅண்ணாமலையில் ஏழை ஒருவனுக்கு (சாதாரண நாளில்) அளிக்கப்படும் அன்னதானமானது காசியில் ஒரு கோடி பேர்களுக்கு அளித்த அன்னதானத்தை விட உயர்வானது;அதிலும் துவாதசி திதியன்று திருஅண்ணாமலையில் ஒருவர் அன்னதானம் செய்தால்,அன்னதானம் செய்தவர் தனது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்.இதனால்,அன்னதானம் செய்தவருக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என சிவமகாபுராணத்தின் வித்யாசார சம்ஹிதை விவரிக்கிறது.



கர வருடத்தில்(14.4.2011 முதல் 13.4.2012 வரை) வர இருக்கும் துவாதசி திதி நாட்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.உங்களுக்கு வசதியான துவாதசி நாளில்,தமிழ்நாடு மாநிலம்,சென்னை அருகிலிருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரமாகிய திருஅண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரையும்,உண்ணாமலையம்மாளையும் தரிசித்து,கிரிவலம் சென்று,கிரிவலப்பாதையில் வாழும் துறவிகளுக்கு அன்னதானம் செய்து சுபிட்சம் பெறுக!!!



ஓம்சிவசிவஓம்



14.4.2011 வியாழன் மாலை6.27 முதல் 15.4.2011 வெள்ளி மாலை 4.10 வரை



29.4.2011 வெள்ளி முழுவதும்



13.5.2011 வெள்ளி நள்ளிரவு(சனி விடிகாலை) 2.38 முதல் 14.5.2011 சனி இரவு 12.13 வரை



28.5.2011 சனி இரவு 9.58 முதல் 29.5.2011 ஞாயிறு இரவு 11.48 வரை



12.6.2011 ஞாயிறு முழுவதும்



27.6.2011 திங்கள் மதியம் 1 முதல் 28.6.2011 செவ்வாய் மதியம் 2.12 வரை



11.7.2011 திங்கள் மாலை 5.28 முதல் 12.7.2011 செவ்வாய் மதியம் 3.42 வரை



27.7.2011 புதன் முழுவதும்



10.8.2011 புதன் முழுவதும்



25.8.2011 வியாழன் மதியம் 2.22 முதல் 26.8.2011 வெள்ளி மதியம் 1.43 வரை



8.9.2011 வியாழன் மதியம் 12.31 முதல் 9.9.2011 வெள்ளி மதியம் 12.27 வரை



24.9.2011 சனி முழுவதும்



8.10.2011 சனி முழுவதும்



23.10.2011ஞாயிறு காலை 11.22 முதல் 24.10.2011 திங்கள் காலை 9.20 வரை



6.11.2011 ஞாயிறு மாலை 6.19 முதல் 7.11.2011 திங்கள் இரவு 8.08 வரை



22.11.2011 செவ்வாய் முழுவதும்



6.12.2011 செவ்வாய் மதியம் 1.06 முதல் 7.12.2011 புதன் மதியம் 3.13 வரை



21.12.2011 புதன் காலை 7.44 முதல் இன்று முழுவதும்



5.1.2012 வியாழன் காலை 8.45 முதல் 6.1.2012 வெள்ளி காலை 10.28 வரை



19.1.2012 வியாழன் மாலை 6.39 முதல் 20.1.2012 வெள்ளி மாலை 4.44 வரை



4.2.2012 சனி முழுவதும்



18.2.2012 சனி முழுவதும்



4.3.2012 ஞாயிறு இரவு 7.25 முதல் 5.3.2012 திங்கள் இரவு 7.09 வரை



18.3.2012 ஞாயிறு மாலை 6.46 முதல் 19.3.2012 திங்கள் மாலை 6.26 வரை



3.4.2012 செவ்வாய் காலை 8.32 முதல் 4.4.2012 புதன் காலை 7.18 வரை





ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. Sir,

    Migaum Nalla Pathippu.

    Vazthukkal!

    Nandri
    S.RAJENDRAN
    BANGALORE.

    ReplyDelete