ஜோதிடப்படி,அசுரர்களுக்குத் தெரியாமல் நான்கு வேதங்களை மகாவிஷ்ணு மறைத்துவைத்த ராசிகள் கடக ராசியும்,மகர ராசியும் ஆகும்.இங்கிருந்து இந்த ராசிகளுக்கு நாம் ராக்கெட்டில் பயணம் செய்தால் சுமார் 20,000 முதல் 90,000 வருடங்கள் ஆகும்.அதுவும் விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணித்தால்! இந்த விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் தூரம் என்பது ஒளி வேகம் ஆகும்.அவ்வளவு தூரத்தில் இந்த ராசிமண்டலங்கள் அமைந்திருக்கின்றன.
ஆடிமாதத்தில் நமது சூரியன் கடகராசியையும்,தை மாதத்தில் மகர ராசியையும் கடக்கும்.அப்படிக் கடக்கும்போது,ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒன்று சேரும் நாட்களே ஆடி அமாவாசையும்,தை அமாவாசையும்.இந்த இரண்டு நாட்களிலும் நாம் நமது முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதால்,நாம் இந்தப்பிறவியில் நம்மையறியாமல் வர இருக்கும் பிரச்னைகள்,விபத்துக்கள்,அவமானங்களிலிருந்து தப்பிக்கலாம்.நம்மை அரூபமாக நமது முன்னோர்கள் (பித்ரு தர்ப்பணம் செய்வதால்)காப்பாற்றுவார்கள்.
எதிர்வரும் தை அமாவாசையானது 2.2.11 புதன் கிழமையன்று வருகிறது;அன்று நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்,நமது ஓம்சிவசிவஓம் மந்திரத்தின் பலனை முழுமையாகவும்,மிக அதிகமாகவும் பெறுவதற்கு முயல வேண்டும்.
ஒன்று:நமது ஊருக்கு அருகில் இருக்கும் கடலோரக் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.அது முருகன்,காளி,பெருமாள் என எந்தக் கோவிலாக இருந்தாலும் சரி;அதிகாலையிலேயே எழுந்து சூரியன் உதயமாகும் வேளையில் கடலில் நீராடியிருக்க வேண்டும்.சரியாக சூரியன் உதயமாகும் வேளையில் நாம் நமது மஞ்சள் துண்டு,ருத்ராட்சங்கள்,விபூதியோடு அந்த கடலோரக்கோவிலுக்குள் அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இதனால்,நமது ஜபத்தின் பலன் 1000 கோடி மடங்குகளாகப் பெருகும்.இந்த நாளில் நாம் காலை 5.45 முதல் 6.45 வரையிலும் கடலோர கோவிலுக்குள் அமர்ந்து ஜபிக்க வேண்டும்.(பலர் கோவிலுக்கு வருவார்களே? என்ன செய்வது?)கண்களை மூட வேண்டாம்.வேடிக்கை பார்ப்பது போல் கைகளுக்குள் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு,உதடு அசையாமல் ஜபித்துவருவது நல்லது.யாரிடமும் பேச வேண்டாம்.யாராவது பேசினால்,ஒரு புன்னகை செய்தால் போதுமானது.
ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் முடிந்தப்பின்னர்,அந்த கோவில் மூலவரை வழிபட்டப்பின்னர்,கோவிலுக்கு வெளியே நம்மால் ஆன அன்னதானம் அல்லது உணவு(பழங்கள்/இனிப்பு)தானம் சிலருக்குச் செய்ய வேண்டும்.அதன் பிறகு,நாம் அங்கேயே நமது காலை உணவை முடிக்கலாம்;அல்லது நமது வீட்டிற்குத் திரும்பிவந்தும் காலை உணவை முடிக்கலாம்.
கடலோரக்கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள்,அருகிலிருக்கும் மலைக்கோவிலுக்குச் சென்று இதேபோல செய்யலாம்.(நமதுவீட்டில் குளித்துவிட்டுச் சென்று மலைக் கோவிலுக்குச் சென்று)ஒரு மணி நேரம் மந்திர ஜபம் செய்யலாம்.விடிகாலையில் இப்படி செய்ய முடியாதவர்கள்,அன்று 2.2.11 புதன் கிழமையன்று ஏதாவது ஒரு மணிநேரத்தில் மேற்கூறியதுபோல் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.
விடுமுறையும் எடுக்க முடிந்து,ஓரளவு பணமும் வைத்திருப்போர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் சித்தர்களின் வீடாகிய சதுரகிரிக்கு அல்லது சித்தர்களின் கோவிலாகிய (விழுப்புரம் அருகிலிருக்கும் திருவண்ணாமலை மாவட்டம்) திருவண்ணாமலைக்கு அல்லது சித்தர்களின் தவச்சாலையாகத் திகழும் வேலூர் அருகில் இருக்கும் பர்வத மலைக்கு செல்லுங்கள்.அங்கே இதேபோல் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் செய்யுங்கள்.முடிந்தால் மூன்று மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க அடுத்த சில நாட்கள் அல்லது சில வாரங்களில் உங்களது நீண்ட நாள் சிக்கலான பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும் என்பது உறுதி.
திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றுகொண்டே நமது ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.தை அமாவாசை என்பதால் அன்றிரவு திருஅண்ணாமலைக்கு உங்களது ருத்ராட்சங்களோடு வந்து இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு (ஐந்துமுக)ருத்ராட்சங்களை மடக்கியவாறு மாலை 6 மணிக்கு மேல் அண்ணாமலையின் கிழக்குக் கோபுரவாசலில் இருக்கும் தேரடி முனீஸ்வரர் கோவிலில் இருந்து,அவரைவணங்கி,அனுமதி கேட்டு கிரிவலம் புறப்படலாம்.ஒரு முறை கிரிவலம் முடிக்க ஆறு மணி நேரம் ஆகும்(இரவு என்பதால் ஐந்து மணி நேரம் ஆகும்)
ஆக,தை அமாவாசையில் திருஅண்ணாமலை கிரிவலம் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறு செல்லுவதே
மிகவும் சுலபமானது;சிறப்பானது.திரு அண்ணாமலை கிரிவலத்தை பூதநாராயணப்பெருமாள் கோவிலில் முடிக்க வேண்டும்.
இவற்றில் எதுவும் செய்ய இயலாதவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்துக்கு (காலையிலோ,மாலையிலோ,இரவிலோ)சென்று ஓம்சிவசிவஓம் ஒரு மணிநேரம் ஜபித்துவரலாம்.இதுவும் முடியாதவர்கள்,உங்களின் வீட்டின் மாடியில் தை அமாவாசை அன்று இரவு ஏதாவது ஒரு மணிநேரத்துக்கு(மொட்டை மாடியாக இருந்தாலும்) ஓம்சிவசிவஓம் ஜபித்துவருக!! அளவற்ற சிவ ஆசிர்வாதம் பெறுக!!!
இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை நமக்கு அறிமுகம் செய்துவைத்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு நன்றிகள்!!!!
No comments:
Post a Comment