Friday, January 7, 2011

எங்கெல்லாம் ஓம்சிவசிவஒம் ஜபிக்கலாம்?

இது மார்கழி மாதம் அல்லவா? வெகு விரைவில் நமக்கு ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தினால் நன்மைகள் கிடைக்க(நமது முற்பிறவி பாவங்கள் நீங்கிட) தினமும் அதிகாலை மணி 4.30 முதல் 6.00 மணி வரையிலும் நமது வீட்டின் மாடியில் ஜபித்துவரலாம்.(குளித்து தயாரானப்பின்னர்தான்)



நமது ஊரில் இருக்கும் மலைக்கோவில்களில்(அது பெருமாள் கோவிலாக இருந்தாலும்,முருகன் கோவிலாக இருந்தாலும்,ஆஞ்சநேயர் கோவிலாக இருந்தாலும்) உயரமான இடத்தைத் தேர்ந்தெடுத்து(முடிந்தால்தான்) அங்கே தினமும் காலை ஒரு முறை,மாலை ஒரு முறை வீதம் ஜபித்துவரலாம்.ஒரு முறைக்கு குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் வரை ,அதிகபட்சம் 1 மணிநேரம் வரையிலும் ஜபிப்பது நன்று.

அனுபவத்தில் ஒரு முறைக்கு 15 நிமிடம் வரைதான் ஜபிக்கவே முடிகிறது.ஒரே ஒரு நாள் மட்டுமே 60 நிமிடங்கள் வரையிலும் ஜபிக்க முடிந்தது.



இமயமலை முழுக்கவும் சாமியார்கள் இருப்பதற்குக் காரணமே இதுதான்.எவ்வளவு உயரத்தில் இருந்து மந்திர ஜபம் ஜபிக்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமக்கு மந்திர ஜபத்தின் புண்ணியம் பலனாகக் கிடைக்கும்.ஆக,மனத்தை ஒரு முகப்படுத்தி மனதிற்குள் ஒரு குறிப்பிட்ட ஒலியதிர்வினை உருவாக்கும்போது நமது தலைவிதியையே மாற்றிட நம் ஒவ்வொருவராலும் முடியும்.இதையெல்லாம் ஆராயாமல்,கடலுக்கடியிலும்,விண்வெளியிலும் ஆராய்ந்து நாம் என்னத்தைக் கண்டோம்?



ஆலமரத்தடியில் அதிகாலையில் அதுவும் மார்கழிமாதத்தின் வைகறைப்பொழுதில் ஓம்சிவசிவஒம் ஜபித்துவர,ஓவ்வொரு ஜபத்திற்கும் பல கோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியம் கிடைப்பது நிச்சயம்.



கிராமங்களிலும்,பால் பண்ணைகளிலும் பசுக்களைக் கட்டியிருக்கும் தொழுவத்தில் அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபித்தாலும் பல கோடி மடங்கு ஜபித்த பலன் கிடைக்கும்.



ஆனாலும்,நாம் நமது மனத்தினால்,ஒரு லட்சம் முறை விடாமல்(அப்பியாசப்படி அதாவது தினமும் ஓரிரு முறை என்று சில மாதங்களில்) ஜபித்து வந்தப்பின்னர்,நமது நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும்.



எனது நீண்டகால பால்ய நண்பர் எப்படி ஜபிக்கிறார் தெரியுமா?



அவரது மாட்டுக்கொட்டகையில் இந்த மார்கழிக்கடும் குளிரில், கழுத்தில்,புஜத்தில்,இடுப்பில்,உச்சந்தலையில் தலா ஒரு ருத்ராட்சம் அணிந்துகொண்டு,இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வைத்துக்கொண்டு, உடலெங்கும் திருநீறு பூசி,இடுப்பில் மஞ்சள் துண்டு மட்டும் அணிந்து,மஞ்சள் நிறவிரிப்பு விரித்து,குறைந்தது ஒரு மணிநேரம் வரை அதிகாலையில் ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்.



ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் அமாவாசையன்று சதுரகிரிக்குச் சென்று அங்கே தனிமையில் வனாந்திரத்தில் காலை ஒரு மணி நேரமும்,மாலை ஒரு மணிநேரமும் அங்கிருக்கும் ஆலமரத்தடியில்(மேலே கூறியது போல்) ஜபிக்கத் திட்டமிட்டுள்ளார்.

சரி! நமக்கும் இதுபோல் குடுப்பினை இருந்தால் சரி!! நாமும் இவரைப்போல் முயற்சிக்கலாமே!!!

1 comment:

  1. என்னை பொருத்தவரையில் ஓம் நமசிவாய மந்திரத்தை எந்த இடத்திலும் எந்த நிலையிலும் சொல்லலாம் என்பதே. ஆனால் சில குறிப்பிட்ட இடங்களில் சொல்வதால் அதிக சக்தி என்பதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை.
    எல்லாமே மனதை பொருத்ததுதான்.
    தாங்கள் சொல்வது போல ரிஷிகளும் முனிகளும் இமயமலையில் இருக்கிறார்கள்தான் ஆனால் அவர்கள் இறைவனின் நாமத்தை ஜபிக்கமட்டுமே அங்கு சென்றிருக்கிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் என்றால் தவத்திலும் இறைவழிப்பாட்டிலும் பல நிலைகளை கடந்தவர்களுக்கே இமயமலையில் இடமுன்டு என்பது என் கருத்து. எவர் ஒருவரும் ஆன்மிகத்தில் நுழைந்த முதல் படியிலேயே இமய மலையில் சென்று தவமிருக்க முடியாது.

    அன்புடன்
    சிவன் பக்தன்

    ReplyDelete