Thursday, January 27, 2011

சிவ ஆலய புணருத்தாரனத்திற்கு உதவ விருப்பமா?

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள தெங்கால் என்னும் கிராமத்தில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலான , தொன்மை வாய்ந்த ஒரு சிவ ஆலயம் உள்ளது.  ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருகண்டேஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். இந்த ஆலயம்  சமீப காலமாய் வெகுவாக சிதிலம் அடைந்து , இப்போது முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை  காரணமாக வேலைகள் சற்று தாமதமாகி வருகிறது. இந்த ஆலயம் பற்றிய ஒரு கட்டுரை, சக்தி விகடனில் சென்ற வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இதழில் வெளியாகி , ஏராளமான அன்பர்கள் நிதி உதவி செய்து , ஆலயப் பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ளன. அந்த இதழின் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்யவும்



http://www.ziddu.com/download/13375806/shakti1.pdf.html

 http://www.ziddu.com/download/13375824/shakti2.pdf.html


கிராம மக்களிடமும் இயன்ற அளவு நிதி பெறப்பட்டுள்ளது. இப்போது ஐயனுக்கும், அம்மனுக்கும் - கோபுர வேலைகள் தொடங்கப் பட உள்ளன . விருப்பம் இருக்கும் அன்பர்கள், தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்யலாம். பணம் அனுப்பும் முறைக்கு ஆலய திருப்பணிக் குழு செயலாளர் திரு. பத்மநாபன் ( அலை பேசி :  93617 28052 ) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு , மேலும் விபரங்கள் பெற்றுக் கொள்ளவும்.

Crystal Shivling

 இப்போது உள்ள நிலவரப்படி இன்னும் சுமார் 10 லட்சம் வரை நிதி தேவைப்படும் என்று தெரிகிறது. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை தெரியப் படுத்தி , ஆலயப் பணிகளில் கரம் கோர்த்து இறையருளை பெற வேண்டுகிறோம.

திருப்பணி தகவல் ஏடு பற்றி மேலும் விபரங்கள் அறிய, இங்கே க்ளிக் செய்து file ஐ  டவுன்லோட் செய்யவும்.
http://www.ziddu.com/download/13376225/temple.pdf.html

 இங்குள்ள திருகண்டேஸ்வரரை வணங்கினால், தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நிறைவேறும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். நிறைந்த ஞானமுள்ள குழந்தைகள் கிடைக்கும். இத்தனை சக்தி வாய்ந்த இறைவன் இப்போதுதான் ஆலயம் பற்றி தகுதி உள்ளவர்களுக்கு தெரியப் படுத்த திருவுளம் கொண்டு இருக்கிறார் போல... ம்ம்..

பொதுவாக எந்த ஒரு ஆலயத்திற்கு நீங்கள் உதவினாலும், ராமருக்கு உதவிய அணில் போல சிறு உதவி ஆனாலும், உங்கள் வாழ்வில் நிறைந்த ஐஸ்வர்யங்கள் கிடைப்பது உறுதி.. 

இந்த  தகவலை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எமது இணைய தளம் பெருமை கொள்கிறது. உங்களால் முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்தி ஆலயத்திற்கு உதவுங்களேன்....

No comments:

Post a Comment