Thursday, January 27, 2011

சதுரகிரியில் இருக்கும் மூலிகைகள்






வெட்டுப்பட்ட காயங்களை உடனே சீர்படுத்த அடுகள்ளி,தொடுகள்ளி என்ற மூலிகைகள் சதுரகிரியில் மட்டுமே காணப்படுகின்றன.(கொல்லிமலையில் இருக்கலாம்).சர்ப்ப கந்தி என்ற மூலிகையும் இங்கு காணக்கிடக்கிறது.பாம்பின் விஷத்தை உடனே முறிக்கும் சக்தியுடைய இம்மூலிகையை நமது வீட்டின் புழக்கடையில் வளர்ப்பதால் அந்த இடத்துக்கு பாம்பு வராது.



அலைபாயும் மனத்தை ஒருமுகப்படுத்திட சர்ப்ப கந்தி மூலிகையின் விதை,பழம்,இலை இவற்றில் ஏதாவது ஒன்றை உட்கொண்டு சமாதிநிலை வரை போகமுடியும்.இதைப் பயன்படுத்தும் ரகசியத்தை சித்தர்கள் தமது சீடர்களுக்கு உபதேசித்துள்ளனர்.



முண்டக விருட்சம் என்ற மூலிகை மரமும் சதுரகிரி வனப்பகுதியில் இருக்கிறது.இதன் அடியில் நாம் அமர்ந்தால் நமக்கு எத்தனை நாள் ஆனாலும் பசி,தாகம் எதுவும் எப்போதும் ஏற்படாது.சித்தர்கள் இந்த உலகை விட்டு நீங்க உதவும் சூட்சும பாதையாக இந்த மரத்தை இன்றும் பயன்படுத்திவருகின்றனர்.



ஜோதி விருட்சம் என்றொரு மரம் இங்கு இருக்கிறது.இதுபற்றி பல ஜோதிட இதழ்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.பகலில் சாதாரணமாகக் காட்சி தரும் இந்த மரம் இரவில் ஒளி வீசும் தன்மை உடையது.இதிலிருந்து வடியும் பாலுக்கும் ஒளிவிடும் தன்மையுள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.(குருபலம் இருந்தால் மட்டுமே இதை பார்க்க முடியும்).இந்த மரத்தின் பாலை ஒரு தேக்கரண்டி வீதம் 3 நாள் 3 வேளை உட்கொண்டால் இதன் வீர்யம் தாங்காமல் நம் உடல் மூர்ச்சை அடைந்து விடும்.அதேசமயம் பசுவின் பாலை புகட்டிவந்தால்,மயக்கம் தெளிந்துவிடும்.



நன்றிகள்:சதுரகிரி இலவச மாத இதழ்,பக்கம் 12,13;தை2011.

No comments:

Post a Comment