Friday, January 28, 2011

விக்ருதி வருடத்தின்(14.4.2010 முதல் 13.4.2011) எஞ்சிய மைத்ர முகூர்த்த நாட்கள்





ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று உண்டு.இந்த நேரம் ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில்,ஒவ்வொரு நாளும் அதிக பட்சமாக இரண்டு மணிநேரம் வரை இந்த மைத்ரமுகூர்த்தம் இருக்கும்.இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பங்கினை,கடன் வாங்கியவரிடம் திருப்பி செலுத்த வேண்டும்.(வட்டியை இந்த நேரத்தில் கட்டக்கூடாது)அப்படி செலுத்தினால்,அதன்பிறகு,நமது கடன் எவ்வ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் வெகுவிரைவில் தீர்ந்துவிடும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மைத்ர முகூர்த்த நேரங்களை நமது ஆன்மீகக்கடல் வாசகர்கள் பயன்படுத்தி,அவர்களது மாபெரும் கடன்களை அடைத்துள்ளனர்.



நமது தமிழ் வருடம் பிறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன.இந்த இரண்டு மாதங்களில் இருக்கும் மைத்ர முகூர்த்த நேரங்கள் வருமாறு:



9.2.2011 புதன் காலை 10.45 முதல் 12.45 வரை



24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் 1.39 வரை



9.3.2011 புதன் காலை 9.01 முதல் 11.01 வரை



24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் 11.45 வரை



5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் 8.46 வரை



இந்த மைத்ர முகூர்த்த நேரங்கள் இந்தியா முழுவதற்கும்,இலங்கை,மாலத்தீவுகள்,அந்தமான் நிகோபார்,மொரிஷியஸ் தீவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

1 comment:

  1. உங்கள் கடன் முழுமையாகத் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது என்ற தலைப்பில் வந்த உங்கள் கட்டுரை இந்த ஆண்டுக்கு இன்னும் வரவில்லையே. ஒரு பதிவு போடுங்கள். இந்த ஆண்டுக்கான மைத்ர முகூர்த்த நேரங்கள் பற்றி. நன்றி

    ReplyDelete