மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
உதாரணமாக,நான் சிவக்குமார் என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியுள்ளேன் என்று வைத்துக்கொள்வோம்.கடன் வாங்கி நான்கு வருடங்களாகிவிட்டன;வட்டி மட்டுமே கட்ட முடிகிறது.அசலை எப்போதுதான் கட்டுவது? என்ற பயமே வந்துவிட்டது.கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் நான் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அதாவது சிவக்குமாரிடம் ரூ.5000/-ஐ ஒரு முறை அசலாக திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடலில் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தினை கணித்து வெளியிட்டுள்ளோம்.இதைப் பயன்படுத்தி,கடனிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 637.
20.4.2011 புதன் இரவு 7.30 முதல் 9.30
30.4.2011 காலை 6 முதல் 7,காலை 11 முதல் 1,மாலை 5 முதல் 7 வரையிலும்.
1.5.2011 ஞாயிறு காலை 5.11 முதல் 7.11
17.5.2011 செவ்வாய் இரவு 7.35 முதல் 8.00 வரை
18.5.2011 புதன் மாலை 6.01 முதல் 6.40 வரை
14.6.2011 செவ்வாய் மாலை 4.43 முதல் 6.43 வரை
22.7.2011 வெள்ளி இரவு 11.36 முதல் நள்ளிரவு 1.36 வரை
8.8.2011 திங்கள் மதியம் 12.45 முதல் 2.45 வரை
19.8.2011 வெள்ளி இரவு 10 முதல் 12 வரை
4.9.2011 ஞாயிறு காலை 11.05 முதல் 1.05 வரை
16.9.2011 வெள்ளி இரவு 8.05 முதல் 10.05 வரை
2.10.2011 ஞாயிறு காலை 9.09 முதல் 10.38 வரை
12.10.2011 புதன் இரவு 7.57 முதல் 8.30 வரை
29.10.2011 சனி காலை 7.02 முதல் 9.02 வரை
9.11.2011 புதன் மாலை 4.12 முதல் 6.12 வரை
25.11.2011 வெள்ளி மாலை 5.40 முதல் 7.40 வரை
6.12.2011 செவ்வாய் மதியம் 2.40 முதல் 4.40 வரை
23.12.2011 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை
3.1.2012 செவ்வாய் மதியம் 1.45 முதல் 3.45 வரை
30.1.2012 திங்கள் காலை 11.05 முதல் மதியம் 1.05 வரை
26.2.2012 ஞாயிறு காலை 9 முதல் 11 வரை
27.2.2012 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை
13.3.2012 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை
25.3.2012 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை
9.4.2012 திங்கள் இரவு 8.30 முதல் 10.30 வரை
இந்த நேரங்கள் அனைத்தும் தென் இந்தியா மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டுமே பொருந்தும்.அட்லீஸ்ட்,நாம் வாங்கிய கடனை திருப்பித் தரப்படும் இடம் மேற்கூறிய பகுதிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.
ஒரே நபர் பலரிடம் கடன் வாங்கியிருந்தால்,தனித்தனியாக அசலைத் தர முயல வேண்டும்.அப்படித் தரும்போது வட்டியைத் தரக்கூடாது.அசலில் பத்தில் ஒரு பங்கு அல்லது நூற்றில் ஒரு பங்கு அல்லது ஆயிரத்தில் ஒரு பங்கினைத் திருப்பித்தரவேண்டும்.அப்படி திருப்பித்தந்து,அசலில் வரவு வைக்க வேண்டும்.இது முக்கியம்.
முயலுங்கள்;கடன் இல்லாமல் நிம்மதியாக வாழுங்கள்;
உங்களுக்கு ஆன்மீகக்கடல் எப்போதும் துணை நிற்கும்.
ஓம்சிவசிவஓம்.
மலேசியா மக்களுக்கும் இந்த நேரம் பொருந்துமா சகோதரே ?
ReplyDeletefeburary and march matham nerangal thara iyaluma
ReplyDeleteநிச்சயமாக.பங்களாதேஷ்,பர்மா,மலேஷியா,சிங்கப்பூர்,மலேஷியா அருகில் இருக்கும் இந்தோனோஷியத்தீவுகள் வரை இந்த நேரம் 70 சதவீதம் வரை பொருந்தும்
ReplyDeletekuwait makkalukku entha neram porunthum
ReplyDelete