புத்தன் போதனை:ஒரு கவிதை
என் அக்காளின்
மானத்தைத் தின்ற நீ
எப்படி விடுமுறைக்கு
வீடு சென்றாய்?
உன் பார்வைக்கு பயந்து
உன் அம்மாவும் தங்கையும்
ஓடி ஒளிய்ய மாட்டார்களா?
உன் பூட்ஸ் ரேகையில்
இத்தனை தசைபிண்டங்கள்
சிக்கிக் கிடக்க
மிடுக்காக நடக்கிறாயே,,எப்படி?
உணர்ச்சி நரம்பை
அறுத்துவிட்டுத்தான்
இணைத்துக் கொள்கிறார்களா
உங்கள் ராணுவத்தில்?
புத்தன் போதனைக்கு
புது அகராதி உண்டோ
உங்களிடம்?
ஒரு தடவையேனும் போய்
கண்ணாடி பார்
இன்னும் தெரிகிறதா
அங்கே மனித முகம்?
எழுதிய கவிதாயினி: தமிழினி
வெளிவந்தது:ஜீனியர் விகடன் 5.7.2009,பக்கம் 18
No comments:
Post a Comment