Monday, July 13, 2009

யோகாஅறிவியலின் மிகப்பிரம்மாண்டமான சாதனை:தியான லிங்கம்


யோக அறிவியலின் மகத்தான சாதனை தியான லிங்கம்

மற்ற ஆலயங்களில் மக்கள் வழிபடும் லிங்கங்களுக்கும் தியான லிங்கத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உண்டு.அந்த ஆலயங்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்துவிட்டு, அதற்கு சக்தியூட்டுவதற்கு மந்திரங்கள் சொல்வார்கள்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை (விக்கிரகத்தின்)சக்தியை புதுப்பிக்கும்விதமாக கும்பாபிஷேகம் போன்றவற்றை நடத்துவார்கள்.மந்திரங்கள்,பூஜைகள் தொடர்ந்து செய்துவந்தால்தான் விக்கிரகங்களின் சக்திநிலை நீடிக்கும். இதற்கு மந்திரப் பிரதிஷ்டை என்று பெயர்.ஆனால், தியான லிங்கம் பிராணபிரதிஷ்டை செய்யப்பட்டது.

அது என்ன பிராண பிரதிஷ்டை?

யோக அறிவியலின் படி,ஒரு இடத்துக்கோ அல்லது ஒரு பொருளுக்கோ முழுசக்தி அல்லது ஆயுளைக்கொடுத்து அந்த சக்திநிலையை பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும்படி செய்யமுடியும்.

அந்த வகையில் சக்தியூட்டப்பட்டு, மனிதனை பலவிதச்செயல்களுக்கு(மனித உடலுடன் எந்த கருவியும் இல்லாமல் பறப்பது,மூச்சடக்கி நீருக்கடியில் நாள்கணக்கில் வாழ்வது, மனித உடலை சில நிமிடங்களில் செல்போன் கோபுரம் அளவிற்கு பெரிதாக்குவது)த்தூண்டும் ஏழு சக்கரங்களும்,தியான லிங்கத்தால் பூட்டப்பட்டுவிட்டால் தியான லிங்கத்துக்கு பூஜைகளோ சடங்குகளோ தேவையில்லை.(அதாவது எனது கருத்து என்னவெனில் இந்துமதத்தின் நவீன வடிவம் இது )

சாதாரண பாமரனுக்கு பிராணப் பிரதிஷ்டைத் தத்துவம் சற்று புரியாமல் போவது மட்டுமல்லாமல், கேள்விகளையும் எழுப்புவதாக இருக்கும்.ஆனால், யோக மார்க்கத்தில் முழ்கி முத்தெடுத்தவர்களுக்கு பிராணப் பிரதிஷ்டை எப்படிப்பட்ட சாதனை என்பது பளிச்சென விளங்கும்.

இது ஒருவரது சாதக(பயிற்சி)த்தின் மூலம் நிகழ்த்தப்பட்டதல்ல.மூன்று பேர் முக்கோண சக்திநிலையை உருவாக்கி சாதகம் செய்து சக்தியூட்டியிருக்கிறார்கள்(படத்தில் தெரியும் தியான லிங்கத்துக்கு).கிட்டத்தட்ட மூன்றுவருடகாலம் இந்த பிரமிப்பூட்டும் பணி நடந்திருக்கிறது.

முக்கோணசக்திநிலையில் ஈடுபட்ட மூவரும் உள்ளம் மற்றும் உணர்வால் ஒருவராக மாறிவிட்டார்கள்.யோக அறிவியலில் சொல்லப்பட்ட ஆழ்ந்த சாதகம் இது.

பிராணப்பிரதிஷ்டை என்று ஏன் பெயர் ஏற்பட்டதென்றால் இப்படிப்பட்ட யோகவேள்வியில் இறங்கும் ஞானிகள் இறுதியில் உயிரை இழக்கும் ஆபத்தும் உண்டு.

கடந்த 2000 ஆண்டுகளில் பல முறை தியான லிங்கம் அமைக்கும் பணி பல ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.ஆனால்,ஆதரவான சூழல் இல்லாததாலும், பிராணப்பிரதிஷ்டையில் உண்டான சிறு தவறுகளாலும் தியான லிங்கம் கைகூடவில்லை.

அதில் ஒன்ரு மத்திய பிரதேசமாநிலம், போபால் அருகில் உள்ள போஜ்பூர் என்ற இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு மகா யோகியால் எடுக்கப்பட்ட முயற்சியானது மிக முக்கியமானது.95% நிறைவுபெற்ற அந்த தியான லிங்கம் முழுமை பெறவில்லை.அந்த தியான லிங்கத்தைசுற்றி உருவாக்கப்பட்ட கோயிலும் அரைகுறையாகவே நிற்கிறது.கி.பி.992 ஆம் வருடம் இச்சம்ப்வம் நிகழ்ந்தது.இப்போது அக்கோவில் தொல்பொருளாய்வுத்துறைகட்டுப்பாட்டில் இருக்கிறது.

வெள்ளியங்கிரி மலையில் உள்ள தியான லிங்கம் உருவானது ஒரு தைமாத பவுர்ணமியான தைப்பூசத்தன்றுதான்!!! 200 ஆண்டுகளுக்கு ஒருமுரை முக்கிய கிரகங்கள் அறுகோணநிலையில் அமையும்.
சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்கள் தலைமையில் உருவாக்கியதுதான் உலகின் முழுமைபெற்ற முதல் தியானலிங்கம்!!!
தன் குருவின் கட்டளையை நிறைவேற்றியிருக்கிறார் சத்குரு.
மூன்று பிறவிகள்,முன்னூறு ஆண்டுகள் கழித்து இது சாத்தியமாகியிருக்கிறது.
தகவலுக்கு நன்றி:தியான லிங்கம்,குரு தந்த குரு=தமிழ்புத்தகம் .பக்கங்கள்:28,29,130,146.
கிடைக்குமிடம்:ஈஷா அறக்கட்டளை
15,கோவிந்தசாமி நாயுடு லேஅவுட்
சிங்காநல்லூர், கோயம்புத்தூர்-641005.
போன்:0422-2515345.
இணையதளம்:www.ishafoundation.org
மின்னஞ்சல்:info@ishafoundation.org







No comments:

Post a Comment