சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-2
காகபுஜண்டர் திருச்சி உறையூரில் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி ஆனதாகவும் கூறப்படுகிறது.
ரோம முனி கும்பகோணத்தை அடுத்த கூத்தனூரில் சமாதியானதாகக் கூறுகிறார்கள்.
காலாங்கிநாதர் சீனாவிலும்,காஞ்சிபுரத்திலும்,சேலம் அருகில் உள்ள கஞ்சமலையிலும் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.(ஒரு சித்தர் ஒரே நேரத்தில் எட்டு இடங்களில் ஜீவசமாதியடையமுடியும் என்பதை ஜனவரி 2009 வலைப்பூவிலேயே கூறியுள்ளோம்)
தமிழ்நாட்டில் உள்ள திருவீழிமழலையில் ஒரு வில்வமரத் தூண் இருக்கிறது.இங்கு காலாங்கிநாதர் ஜோதி ரூபமாக உறைகிறார்.
கொங்கணர் திருப்பதி பாலாஜிசுவாமி மூலஸ்தானத்தின் நேர் கீழே தவம் செய்து கொண்டிருக்கிறார்.
சட்டைமுனி சீர்காழியில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.இவருக்கு அங்குள்ள கோவிலில் சட்டைநாதர் என்று பெயர்.
வாழ்க்கையில் எந்த பிடிப்புமின்றி வாழ்ந்து வருபவர்கள் சட்டைமுனிக்கு தினந்தோறும் சித்தயோகம் மற்றும் அமிர்தயோகம் நேரங்களில் அர்க்கியம் அளிப்பது நன்று.திருவாதிரை,திருவோணம்,புனர்பூசம்,புதன்கிழமை,அமாவாசை,வாஸ்துநாள் போன்ற நாட்களில் குறிப்பாக தமிழ்வருடப்பிறப்பன்று ‘ஸ்ரீசட்டை நாத சித்தமா முனி தர்ப்பயாமி’ என்று 18 முறை சொல்லி கீழ்நோக்கிய் அசின்முத்திரைவடிவில் வலதுகையை தாழ்த்திவைத்து கைகளில் நீரைவார்த்து அர்க்கியம் அளிப்பது நன்று.(இதனால் தீராத பிரச்னைகள் தீரும்)
யாக்கோபு முனி என்ற ராமதேவர் மெக்காவிலும் அழகர்மலையிலும் ஜீவசமாதியடைந்துவிட்டார்.
கோரக்கர் புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு என்ற இடத்திலும், தமிழ்நாட்டில் பேரூரிலும் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.
மச்ச முனி திருப்பரங்குன்றத்திலும் திருவானைக்கா(திருச்சி)விலும் சித்தியடைந்திருக்கிறார்.
கருவூரார் கருவூரில் இறைவனிடம் கலந்துவிட்டார்.அங்கு இவருக்கு ஒரு தனி சன்னதி இருக்கிறது.
பிண்ணாக்கீசர் கேரளாவில் உள்ள நாங்கணாச்சேரியில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.
சிவவாக்கியர் கும்பகோணத்தில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.இங்கு இச்சமாதியில் பவுர்ணமி பூஜை நடைபெற்றுவருகிறது.
அகப்பேய் சித்தர் திருவையாறு என்ற இடத்தில் ஜீவசமாதியாகியிருக்கிறார்.
தேரையர் மலையாளநாட்டில் உள்ள தோரண மலையில் தவம் செய்து அங்கேயே ஜீவசமாதியடைந்தார்.
பாம்பாட்டி சித்தர் மருதமலை, துவாரகை,விருத்தாசலம்(பழமலை) யில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.மருதமலையில் பாம்பாட்டிசித்தர் குகை,பாம்பாட்டி சுனை இருக்கிறது.
குதம்பைசித்தர் மயிலாடுதுறையில் ஜீவசமாதியடைந்தார்.
புலிப்பாணி பழனிமலையில் இருக்கிறார்.
அழுகணிசித்தரின் ஜீவசமாதி நாகப்பட்டிணத்தில் உள்ள சிவாலயத்தினுள் இருக்கிறது.
No comments:
Post a Comment