நமது இந்தியாவின் இன்றைய நிலை
பாகிஸ்தான் தீவிரவாதிகள் கராச்சியிலிருந்து கிளம்பி படகு மூலமாக நமது பொருளாதாரத் தலைநகர் மும்பைக்கு வந்து ரயில் நிலையம், உணவகங்கள்,பொது இடங்களில் சகட்டு மேனிக்கு சுட்டுத்தள்ளி நமது இந்திய சகோதரர்கள் பலர் இறந்துவிட்டனர்
நமது ராணுவம்,மராட்டிய காவல்துறை,கடல்படையின் அதிரடிப்பிரிவு என அனைவரும் வந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர்.அதில் ஒருவன் உயிருடன் பிடிபட்டான்.இன்று அவன் நமது பாதுகாப்பில் இருக்கிறான்.
சுதந்திரம் வாங்கிய் 1947 முதல் 2009 வரை பாகிஸ்தான் உலகிலேயே திவிரவாதத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது.உலகிலேயே திவிரவாதத்தை இறக்குமதி செய்யும் நாடாக நாம் இருக்கிறோம்.இறக்குமதி செய்யும் நிறுவனம் அ.இ.கா.க.என்ற காங்கிரஸ் கட்சி.அதாவது அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸ்.செத்துப் போவது நம்மைப்போன்ற சாதாரண மக்கள்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008 ஆம் வருடம் மாதா மாதம் நமது நாட்டைத் தாக்கியும் கூட பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த நமது இந்திய அரசு தயங்குகிறது.அப்படித் தாக்கினால், மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாதாம்.பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடமாட்டார்களாம்.ஆக,ஆட்சிதான் முக்கியம்.மக்கள் முக்கியமல்ல.இருந்தும் நாம்தான் காங்கிரஸை ஜெயிக்க வைத்துக்கொண்டு இருக்கிறோம்.
சரி அப்படியே காங்கிரஸ் பாகிஸ்தானை தாக்கினால் பாகிஸ்தான் அணுகுண்டு நம்மீது வீசிவிடுமாம்.(பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்க உதவியது சீனாவும் அமெரிக்காவும்)ஆக நம்மை உலக அரங்கில் அப்பாவியாக்கி வடிவேலு பாணியில் ‘ நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா’ என்ற கதைதான்.அந்தளவுக்கு நாம் என்ன மானங்கெட்டவர்களா?
ஆமாம்.மாதாமாதம் தீவிரவாதத்தாக்குதல் நடத்தியும் அதைத் தடுக்க என்ன செய்திருக்கிறோம்.
பைபிள் கிறிஸ்தவர்களின் வேதப்புத்தகம்.அதில் ஏசுநாதர் ‘ ஒரு கன்னத்தில் உன் எதிரி உன்னை அறைந்தால் மறு கன்னத்தைக்காட்டு’ என்றார்.
பகவத் கீதை இந்துக்களின் வேதப்புத்தகம்.அதில் நம்ம கிருஷ்ணர் ‘அர்ஜீனா! கலங்காதே.போர்க்களம் என்று வந்து விட்டால் மச்சான்,மாமா,தாத்தா என்றெல்லாம் உறவுகளைப் பார்க்காதே.உனது வெற்றி மட்டுமே முக்கியம்.உன் எதிரி யாராக இருந்தாலும் அவர்களை அழித்து நிர்மூலமாக்கு’ என்கிறார்.
இஸ்லாமியக்குடியரசு பாகிஸ்தான், கத்தோலிக்க கிறிஸ்தவ அமெரிக்கா,புத்த இலங்கை இவை அனைத்தும் என்றைக்கு இந்துமதத்திற்கு மதம் மாறினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை? அவர்கள் பகவத்கீதையின் உபதேசத்தைப் பின்பற்றுகிறார்கள்.
நாம் இந்தியர்கள் நாம் எப்போது கிறிஸ்துவமதத்திற்கு மாறினோம்.?நாம் ஏன் பைபிளின் போதனைப்படி ஆட்சி செய்கிறோம்.
யாராவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
No comments:
Post a Comment