Saturday, July 25, 2009

சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கும் இடங்கள்-1

சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்-1


அகத்தியர் திருவனந்தபுரத்தில்( அனந்த சயனம் ) சமாதியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு சிலர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதியடைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

சித்தர்களின் தலைவரான அகத்தியருக்கு கும்பமுனி என்ற பெயரும் உண்டு.எனவே இவரது ராசி கும்பராசியாக இருக்கலாம்.கும்பராசிக்காரர்களுக்கு இவரது அருளாசி வெகுவிரைவில் கிடைக்கும் எனக்கூறலாம்.கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கும் இவரது தரிசனம் விரைவில் கிடைக்கலாம்.

இந்த வலைப்பூவில் போன வருடத்தில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்பதை விளக்கியுள்ளோம்.அதன்படி பயிற்சி செய்பவர்கள் 45 நாளிலேயே எந்த சித்தரையும் நேரில் தரிசித்து, பேசி அவரின் நேரடி சீடராகக்கூட மாறலாம்.முயற்சி செய்யுங்கள்.நிம்மதியாக வாழ்க வளமுடன்!!!

போகர் பழனி மலைமீது வாழ்ந்துவருகிறார்.பழனி மலைமீது இவரது ஜீவ சமாதி இருக்கிறது.இங்கு தினமும் (பழனிக்காரர்கள்) சில நிமிடங்கள் இவரை நினைத்து நம் கஷ்டங்களை மனதால் கூறினாலே நம் வாழ்க்கை சுபிட்சமாகும்.

காக புஜண்டரின் ஜீவசமாதி திருச்சி உறையூரில் உள்ளது.

ஸ்ரீவல்லபசித்தர் என்ற சுந்தரானந்தர் சித்தரின் ஜீவ சமாதி ,மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் சித்தர் சன்னதி என்று பிரசித்திபெற்ற சக்திவாய்ந்த திருச்சன்னதியில் இருக்கிறது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும்,திருவாதிரை,உத்திரம்,சதயம் நட்சத்திர நாட்களில்(உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகி எந்த நாள் எனக்கேட்கவும்)இச்சித்தர் பெருமான் சன்னதியில் குங்குமப்பூ,முந்திரி,பாதாம்கலந்த பாலால் அபிஷேகம் செய்து இம்மூலிகைக்கலவை நிறைந்த பாலை ஏழைக்குழந்தைகளுக்கு தானமாக அளித்து வந்தால் யோகாசனம்,ஜோதிடம் முதலான நுண்கலைகள் கைகூடும்.அந்தத்துறைகளில் வளரலாம்.
தவிர விபத்து,நீரில் மூழ்குதல்,போர்,வெள்ளம்,துர்மரணமடைந்து உரிய உடல் கிடைக்காமை போன்றவைகளால் ஏற்படும் வேதனை தீர இச்சித்தரை வழிபட்டுவர பெரும் நன்மை உண்டாகும்.

No comments:

Post a Comment