Saturday, July 14, 2012

தேசத்தை புனர்நிர்மாணம் செய்யும் சங்கம் இது!!!



தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால்,அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலை உயரும்;அப்படி நிறுவனங்களின் நிலை உயர்ந்தால், நமது நாட்டின் நிலை உயர்ந்துவிடும். இதை நமக்குச் சொன்னவர் இந்து தர்மத்தின் நவீன யுகத்தை சிகாகோவில் துவக்கி வைத்த சுவாமி விவேகானந்தர் ஆவார்.

இவருடைய இந்த கருத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டிருப்பது யார் தெரியுமா? இந்தியாவில் 1925 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஒரு சுயச்சார்புள்ள தன்னார்வத் தொண்டு இயக்கம் ஆகும்.அந்த இயக்கத்தின் பெயர் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் ஆகும்.ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் இதன் சேவைப்பணிகளை நேரில் பார்த்து எழுத ஒரு டெரா பைட் போதாது;அவ்வளவு லட்சக்கணக்கான சேவைப்பணிகளைச் செய்து வருகிறது.அதில் ஒரு உதாரணத்தை உங்கள் முன்பு கூற விரும்புகிறேன்:

மத்தியப்பிரதேச மாநிலம்,நரசிங்கபூர் மாவட்டத்தில் உள்ள மோகாத் என்ற சிற்றூர் கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளது.இந்த ஊரில் படித்தவர்களின் சதவீதம் 98% ஆகும்.இந்த ஊரில் தற்போது பேச்சுமொழி சமஸ்க்ருதம் ஆகும்.இங்கு 450 குடும்பங்களைக் கொண்ட 4000 பேர்கள்  வசிக்கிறார்கள்.இங்கு 50 விதமான குடிசைத் தொழில்கள் திட்டமிட்டு நடைபெறுகின்றன.இந்த ஊரில் உள்ள ஒவ்வொரு சதுர அங்குல விளைநிலமும் பாசன வசதி பெறுகிறது.எந்த வீட்டிலும் விறகு அடுப்பு கிடையாது;அனைவருமே பயோ கேஸ் பயன்படுத்துகிறார்கள்.ஏனெனில்,இந்த ஊரில் வளர்க்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை 3000 ஆகும்.இதன் மூலம் 154 பயோகேஸ் உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டுவருகின்றன.இந்த ஊர் மக்கள் சொல்வது:எங்களுக்கு எல் பி ஜி கேஸ் சிலிண்டர் என்றால் என்ன என்றே தெரியாது!. இந்த ஊரில்1947 லிருந்து ஷாகா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


இதே போல சமுதாய மாற்றத்தை இந்தியாவில் இருக்கும் அனைத்து  மாநிலங்களிலும்,பல மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டமின்றியும்,பெருமையடிக்காமலும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் வெளிநாட்டு சதியுடன் ஜாதிக்கலவரம் உண்டானது;அந்த ஜாதிக்கலவரம் பல கிராமங்களுக்கும் பரவியது;அப்படி பரவிய போது,ஒரு சில கிராமங்களில் மட்டும் ஒரு சிறு சலசலப்பு உருவாகவில்லை;ஏனெனில்,அந்த கிராமங்களில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வலுவாக இருந்தது;அந்த கிராமங்களில் ஜாதி என்பது வெறும் அடையாளமாக மட்டுமே இருக்கிறது.இதுபோன்ற சமுதாய  மாற்றத்தை உருவாக்கிட யாரால் முடியும்?


இப்படி ஒட்டு மொத்த இந்தியாவும் சுயச்சார்போடு விழிப்புணர்வு பெற்றுவிட்டால்,இந்தியாவில் நம்மால் வர்த்தகக் கொள்ளை அடிக்க முடியாதே என்று பன்னாட்டு நிறுவனங்களும்,அந்த நிறுவனங்களின் நாடுகளும் பயப்படுகின்றன;எனவே தான் அவைகள் மீடியாக்களின் துணை கொண்டும்,அரசியல்கட்சிகளுக்கு பணம் கொடுத்தும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் மீது அவதூறு தூற்றுகின்றன.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment