நந்தன வருடத்தின் ஆடி மாத முழுநிலவு நாள் வரும் புதன் கிழமை 1.8.12 இரவு வருகிறது.பூமியில் வாழும் ஓவ்வொரு மனிதனின் ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் முழு பலம் பெறுவது வெறும் மூன்று நொடிகள் மட்டுமே! ஆனால்,அந்த முழு பலத்தையும் நாம் நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஐந்து நாட்களுக்குப்பயன்படுத்த முடியும்.பவுர்ணமிக்கு முந்தைய இரண்டு நாட்கள்,பிந்தைய இரண்டு நாட்கள்,பவுர்ணமி என ஐந்து நாட்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,விரைவான மந்திரஸித்தி கிடைக்கும்.
இந்த நந்தன வருடத்தின் ஆடிமாதத்து பவுர்ணமி நாள் 1.8.12 புதன் கிழமை வருகிறது.இந்த புதன்கிழமையில் மாலை 4 முதல் 5 மணியும்,இரவு 11 முதல் 12 மணி வரையிலும்; மறுநாள் 2.8.12 வியாழன் காலை 6 முதல் 7 மணி வரையிலும் மிகமிக சுபமான குரு ஓரை வருகிறது.இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் நமது வீட்டில் அல்லது கோவிலில் அல்லது கடலோரம் அல்லது நதிக்கரையோரம் அல்லது ஆலமரத்தடியில் அல்லது பசுத்தொழுவத்தில் மஞ்சள் துண்டு விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்வோம்;அமர்ந்து இரு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சங்களை வைத்து குறைந்தது 15 நிமிடம் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;
நமது முதன்மையான லட்சியமான ஒரு லட்சம் தடவைகள் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை சாதிப்போம்;பிறகு அதை இரண்டுலட்சமாக உயர்த்திட முயலுவோம்; பத்து வருடங்களில் ஒரு கோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்து,ஒரே நேரத்தில் பதினெட்டு சித்தர்களையும் நாம் நேரில் தரிசிப்போம்;நாமே சித்தர்களின் அருட்பார்வையால் ருத்ரனாவோம்;மறுபிறவியில்லாத முக்தியை அடைவோம்;
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment