Wednesday, July 4, 2012

காஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா?


மதன் பதில்: கலவரங்களில் ஈடுபடும் கூட்டத்தினரை வைத்து ஒட்டு மொத்தமாக காஷ்மீர் மக்கள் என நாம் கருதி விட முடியாது.காஷ்மீர் மக்களின் இயல்பானகுணமே அமைதியாக வாழ்வது தான்.அதைத்தான் அவர்கள் விரும்பு கிறார்கள்.அந்த சூழ் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி தர முடியவில்லை யெனில், அது யாருடைய தவறு? .
பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைந்தால் என்ன விளைவுகள் ஏற்ப்படும் என்பது அங்குள்ள மக்களுக்கு தெரியும். தனி ‘தக்குனூண்டு’ நாடாகவும் அதால் இயங்கமுடியாது. பிரிவினை வாதிகளும் தேச விரோதிகளும் நமது இந்தியாவின் எந்த_மாநிலத்தில் தான் இல்லை? அதற்காக கலவரங்கள் நடைபெறும் பகுதிகளை யெல்லாம் தனி தனி சுதந்திர நாடுகளாக அறிவித்திட முடியுமா? நல் ல கதை !

முஸ்லீம்கள் பெரும்பான்மை யாக உள்ளார்கள் என்பது வாதமேஇல்லை.அவர்கள் இந்திய முஸ்லீம் கள் என்பதை நினைவில்_கொள்ளுங்கள். தவிர எப் போதிருந்து அங்கே முஸ்லீம்கள் பெரும்பான்மையானார்கள்?

காஷ்மீர் வரலாற்றை (ஊசிமுனையளவு தான்) பார்ப்போமே;



வேதகாலத்தில் அங்கு வசித்து வந்த காஷ்யப முனிவரின் பெயரிலிருந்து தான் “காஷ்மீர்” எனும் பெயரே வந்தது.அவர்_மூலம் விருத்தியான மக்களின்பெயர் (அங்கே மலைகளில் வாழ்ந்த ) காசிகள் என அழைக்கபட்டனர்.

தமிழ் நாட்டுக்கும் காஷ்மீருக்கும் ஒருகாலத்தில் நெருங்கிய மத ரீதியான தொடர்பிருந்தது. ‘சைவ சித்தாந்ததிணை ’ உருவாக்கிய திருமூலர் காஷ்மீரிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தார்.(சிலர் தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் சென்று, பிறகு ஆப்கானியர்களின் படையெடுப்பின் விளைவாக மீண்டும் தமிழகத்துக்கே வந்தார் என்கிறார்கள்). வேதங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, சாதி மதங்களை யெல்லாம் தூக்கி யெறிந்துவிட்டு, ‘அன்பு தான் மதம்; உடல் தான் அதற்கு கோவில்!’ எனும் தத்துவத்தை உருவாக்கியவர்கள் சைவ சித்தாந்திகள். இந்த தத்துவம் உருவானது காஷ்மீரில் தான். தமிழ் பக்தி மார்க்கத்தை காஷ்மீர் மக்கள் வரவேற்று ஏற்றுக்கொண்டார்கள்.

தமிழகத்தில் பிறந்து பிறகு புத்த மத தத்துவ ஞானியாக புகழ் பெற்ற நாகார்ஜீனர் இங்கிருந்து காஷ்மீருக்கு சென்று, கடைசி வரை அங்கேயே வசித்தார்.ஆக பக்தி, தந்தீரீக வழிபாடு, சைவம் இம் மூன்றும் தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்றது.

புகழ்பெற்ற சைவ தாந்திரிக மகான் அபிநவ குப்தர் காஷ்மீரை சேர்ந்தவரே.அவரது காலம் கி கல்ஹணர் ராஜதரங்கிணி பி.970 முதல் கிபி.1025 வரையே. வரலாற்று_மாமேதை கல்ஹணர் காஷ்மீரில் தங்கி ‘ராஜதரங்கிணி’ காவியத்திணை எழுதினார். காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகர் (ஸ்ரீ) முதன் முதலில் அசோக சக்கரவர்த்தியால் நிர்மாணிக்க பட்டது. கனிஷ்க சக்கர வர்த்தி காலத்தில் உலக பெரும் புத்த மாநாடு காஷ்மீரில் தான் நடந்தது.

1001 அராபியன் இரவுகள் கதையை எழுத தூண்டிய கதா சரித் சாகரா கதை தொகுப்பு காஷ்மீரில் உருவானதே.(இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நம்மூர் புத்தக கடைகளில் கிடைக்கிறது). காஷ்மீர் ராமாயணம்கூட உண்டு. யோக வசிஷ்ட மகா ராமாயணம் (வசிஷ்டர் மற்றும் ராமருக்கு இடையே நடை பெறும் நீண்ட உரையாடல்_மூலம் ராமாயணம்). இந் நூலை வாசிக்க சொல்லிகேட்டு பிரமித்து, அதை உடனே பாரசீகமொழியில் மொழி பெயர்க்க சொல்லி ஆணையிட்டவர் யார் தெரியுமா? முகலாய பேரரசர் அக்பர்!

அக்பருக்கு பிறகு நிலைமை மாற தொடங்கியது .வட மேற்கே இஸ்லாமிய நாடுகள் உருவான தாலும் காஷ்மீர் இந்தியாவின் எல்லை பகுதியாக இருந்ததினாலும் , அங்கே 12 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு விரும்பியும் விரும்பாமலும் இஸ்லாமிய மத மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. இந்தியாவுக்கு எதிராக தேசவிரோத சக்திகளை பாகிஸ்தான் தூண்டி விட்டு, இன்றைக்கும் காஷ்மீர் எனும் இந்தியாவின் அற்புத மான விரல்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. சொல்லுங்கள் காஷ்மீரை விட்டு கொடுத்து விடலாமா?
காஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா?, காஷ்மீர் வரலாறு  விவகாரத்தில், காஷ்மீர் பிரச்சனைக்கு , காஷ்மீர் பிரச்சனை,
நன்றி: ஆனந்த விகட

1 comment:

  1. Orupothum vittukkodukka koodaathu. Puraanankalil varum vaishnavi devi aalayamum Kaashmir Bharathathin baagam endre kaattukindrathu. Melum, Jesus Kaashmirathukku vanthirunthathaakavum, nam vethankalai aaraayntha thaakavum, Pin Hindhuvaaka maariyathaakavum, Iruthiyil Kashmiril thaan iranthathaakavum - Siva loka praapthi adainthathaakavum naan padithirukkiren. Aarsha Bharatha Samskaaram Kaashmirathaiyum thazhviyathu thaan. Eppadi vittukkodukka mudiyum ?......

    ReplyDelete