Wednesday, September 21, 2011

துவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்








நமது சொந்த ஊரில் தினமும் 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் (ஒரு வேளை நாம்) செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ,அதே அளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளன்று அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.



காசியில் தங்கி ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.



துவாதசி திதியன்று திரு அண்ணாமலையில் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால்,காசியில் நாம்,நமது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்தளவுக்குப் புண்ணியம் கிடைத்துவிடும்.அதுபோக,நமக்கு மறுபிறவியில்லாத முக்தியும் கிடைத்துவிடும் என்று சிவமகாபுராணம் தெரிவிக்கிறது.



24.9.2011 அன்று சனிக்கிழமையன்று துவாதசி திதி வருகிறது.இந்த நாளானது மஹாளய பட்சம்(பட்சம் என்றால் தூய தமிழில் அரை மாதம் அல்லது 14 நாட்கள் என்று பெயர்.தமிழர்களுக்கே தமிழ் சொல்லித்தருமளவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவன் இந்தியாவை கெடுத்து வைத்திருக்கிறான்)நாட்களுக்குள் அமைந்திருப்பது கோடி பங்கு விஷேசம் ஆகும்.



எனவே, ஆன்மீகக்கடல் வாசகர்கள்,இந்தப்பதிவு மூலமாக 24.9.2011 சனிக்கிழமை வரும் துவாதசி திதியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பீர்கள்.நமது ஆன்மீகக்கடல் அறக்கட்டளை மூலமாக இந்த புனிதமான நன்னாளில் ,திரு அண்ணாமலையில் அன்னதானமும்,வஸ்திர தானமும்,பழதானமும் செய்யப் போகிறேன்.மேலும்,இந்த நாளையொட்டி ஐந்து கிலோ நவதானியங்களை வாங்கி திரு அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் மனித காலடி படாத இடங்களில் தூவப்போகிறேன்.அண்ணாமலைக்கு வருகிறீர்களா நமது பித்ருக்கடன்களை சுலபமாகவும்,நிறைவாகவும் தீர்ப்பதற்கு?



இந்த வாய்ப்பை எனக்கு அளித்த கூகுளுக்கும்,எனது ஜோதிட குருநாதர்களுக்கும்,எனது அன்னை பத்திரகாளியம்மாளுக்கும்,எனது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா  அவர்களுக்கும் எனது மானசீக குரு(அண்ணாமலையை அறிமுகப்படுத்தியவர்)திரு.பி.எஸ்.பி,அய்யா அவர்களுக்கும் கூகுள் நன்றிகள்!!!



ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. r u ok veeramuni sir?no posts for a long time!

    ReplyDelete