2010 முதல் இன்று வரையிலும் சுமார் நான்கு தடவை சனிப்பிரதோஷ நாட்களில் அண்ணாமலையில் சுமார் 5000 ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறை பற்றிய நோட்டீஸ்கள் விநியோகித்திருக்கிறோம்.
ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் 1000 ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த மாதத்தில் ஒரு வியாழக்கிழமையன்று,ஈரோட்டில் ஒரு சிவாலயத்தில் நிகழ்ந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 3000 நோட்டீஸ்களை நமது ஆன்மீகக்கடல் வாசகர் ஒருவர் விநியோகித்திருக்கிறார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை 25.9.11 அன்று பிரதோஷமும் சிவராத்திரியும் ஒருங்கே வந்தது.இந்த நாளில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் நமது வாசகரும்,எனது ஜோதிட சீடருமான ஒரு இளைஞர் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகித்தார்.
அதே நாளில் எட்டுபேர்கள் கொண்ட குழுவினர்,திரு அண்ணாமலையில் உட்பிரகாரம் எனப்படும் மலையை ஒட்டி இருக்கும் வனப்பாதையில் கைகளில் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு பிரதோஷ நேரம் முடியும் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் சென்றனர்.
ஜோதிடராக நான் இருப்பதால்,ஜாதகம் பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை பரப்பிக்கொண்டே இருக்கிறேன்.
இந்தபுனிதமான பணியில் உங்களின் பங்களிப்பு என்ன?
ஓம்சிவசிவஓம்
Ayya please send me 500 notice of Om Siva Siva Om! By Nagesh- Chennai
ReplyDeleteபாஸ்!
ReplyDeleteநான் இடையில் தமிழ்நாட்டுக்கு வந்தபொழுது திருநெல்வேலியில் இருந்து முடிவைத்தானேந்தல் அருகில் உள்ள மிஸ்டிக் செல்வம் அவர்களின் சமாதியை காணும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அங்கு ஒரு தடிச்ச நபரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது "ஆன்மீகத் திறவுகோல்" என்ற புத்தகம் இரண்டு பாகங்களில் உள்ளது என்றும் ஒன்று ஆயிரம் ரூபாய்(?!!!!!!!!!!!?) வரும் என்றார். உண்மையிலேயே ஆயிரம் ரூபாய்தானா?
Dear sir,
ReplyDeleteCan U give me Mr. Mistick Selvam contact address & Numbers. I want to meet him
Om Shiva Shiva Om - Mp3 (ஓம்சிவசிவஓம்) http://www.mediafire.com/?3al56jq4402lph0 [Chat :Dr.Mystic Selvam & group ]
ReplyDeleteஎன்ன இன்னைக்கு ஒன்னும் பதிவு வரவில்லையே!!!!
ReplyDeleteபுதுசா மேட்டர் மட்டலிய?
அதெப்படி முகமில்லாமல் கிண்டல் செய்யுறது? ஆன்மீகக்கடல் வாசகர்களும் அவர்களின் வாழும் ஊரில் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவு எழுதினால். . .
ReplyDelete