Monday, September 5, 2011

ஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படுத்துவோம்;







ஆவணி மாத பவுர்ணமியானது எதிர்வரும் ஞாயிறு (11.9.11) மதியம் துவங்கி,திங்கள் மதியம்(12.9.11) வரை இருக்கிறது.நவக்கிரகங்களில் முதன்மையானதும்,முக்கியமானதுமாகிய ரவி எனப்படும் சூரியன் ஆட்சியாகி,அதற்கு நேர் ஏழாம் ராசியில் சந்திரன் முழு பலம் பெறும் நாளே ஆவணி மாத பவுர்ணமியாகும்.இதையே ஆவணி அவிட்டம் என பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகிறோம்.



ஞாயிறு இரவு பத்து மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித்தெருவில் அமைந்திருக்கும் பத்திரகாளியம்மாள் கோவிலில் பவுர்ணமி பூஜை துவங்க இருக்கிறது.இங்கு இரவு 10 மணி முதல் 11.30 வரை அபிஷேகமும்,11.30 முதல் 12 மணி வரை பூஜையும்,12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை அன்னதானமும் நடைபெற உள்ளது.



எனவே, ஆன்மீகக்கடல் வாசகர்கள் இந்த பவுர்ணமிபூஜையில் கலந்து கொண்டு,பத்திரகாளியன்னையின் அருட்செல்வத்தை அள்ளிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



ராகு திசை நடப்பில் உள்ளவர்கள்,திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்தவர்கள்,இந்த நட்சத்திரத்தை லக்னமாகக் கொண்டு பிறந்தவர்கள் பத்திரகாளி பவுர்ணமிபூஜையில் கலந்து கொள்வதன் மூலமாக,இராகுவின் பாதகங்களிலிருந்து தப்பிக்க முடியும்.உதாரணமாக,கன்னிராசியில் பிறந்து 34 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இராகு மகாதிசையும்,ஜன்மச்சனியும் நிகழ்ந்து கொண்டிருக்கும்.இந்த சூழ்நிலையில் இருப்பவர்கள்,எந்த ஒரு ஒழுக்கக் கேடான செயலையும் இவர்கள் செய்யாமலேயே காமரீதியான அவமானங்களை 26.6.2008 முதல் 30.10.2011 வரை நித்தமும் பட்டுக்கொண்டே இருப்பார்கள்.



இதற்கு இராகு மகாதிசையும்,ஜன்மச்சனியும் காரணம் என ஜோதிடப்படி கண்டறியலாம்;ஆனால்,இந்த அவமானங்களுக்கு= உரிய ஜாதகரின் முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த கர்மவினைகள் இந்தப்பிறவியில் திரும்பி வருகின்றன என்றால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆக வேண்டும்.அந்த கடுமையான கர்மவினைகளைக் கரைக்க,ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளை தரிசித்து, இந்த பவுர்ணமிபூஜையில் கலந்து கொண்டாலே மறுநாள் முதல் நிம்மதியான வாழ்க்கை வாழ ஆரம்பிக்கலாம்.இதுவும் அனுபவ உண்மையே!



வெகு விரைவில்,நமது கல்லூரிகளில் முன் ஜன்ம வினைகளை நீக்கும் பாடத்திட்டங்கள்,டிகிரி,டிப்ளமோவாக இடம் பிடிக்கப் போகின்றன.அவைகளுக்கு இன்றைய கம்யூட்டர் ஸயின்ஸைவிட அதிகமான போட்டி ஏற்படப்போகிறது.



ஓம்சிவசிவஓம்










No comments:

Post a Comment