இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்?
!:ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!
“அஞ்சு வருஷம் எம்.எல்.ஏவா இருந்தார்.நல்லா சம்பாதிச்சார்” என்றுதானே நாமே சொல்கிறோம். ‘அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!
இந்தப்பொறுப்பு உணர்வு அற்றதன்மைதான் அனைத்துக்கும் காரணம். ‘ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள்.எனவே,அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!
ஆன்மீகக்கடலின் கருத்து:நாமே பிராடாக இருந்தால்,நம்மை ஆளும் நமது தலைவர்கள் யோக்கியமாகவா இருப்பார்கள்?
?:தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்?
!: அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!
?:கச்சத்தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.க்ருஷ்ணா கூறியிருப்பது குறித்து?
!:எஸ்.எம்.க்ருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்திருக்கலாம்.
ஆன்மீகக் கடலின் கருத்து: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது,இந்த அமைச்சர் கொந்தளித்ததும் எனக்கு மைல்டாக டவுட்டு வந்தது.இந்திய அமைச்சரவை எப்போதுமே பிரச்னையைக் கண்டு பயப்படுமே? எதுவுமே செய்யாதே? எப்படி இந்த அமைச்சர் மட்டும் இப்படி தன்மானத்தோடு வீறிட்டு எழுகிறார் என எனது வட நாட்டு நட்பு வட்டத்தில் விசாரித்துப் பார்த்தால்,உண்மை தெரிந்தது.
ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டும்,அடிவாங்கியும் தவித்த அனைத்து மாணவர்களும் வட இந்தியா மாணவர்களாம்.ஆக,வட இந்திய மீனவர்கள்,இலங்கைக் கடற்படையிடம் அடிவாங்கினால்தான் இந்த மந்திரிக்கு அறிவு வருமா?
?:முதல்வரைப் பாராட்டி சீமான்(சைமன் என்பது நிஜப்பெயர்) நடைபயணம் கிளம்பியதும்,பாராட்டு விழா நடத்தியதும் பற்றி?
!: மூன்று தமிழர்களை முழுமையாக மீட்டபிறகு ,நிச்சயமாகச் செய்யலாம்.காரியம் முடியாவிட்டால்,பின்னோக்கி நடக்க முடியாது.
No comments:
Post a Comment