Monday, September 12, 2011

கக்கன்:கைசுத்தம் சமய உணர்வினால்!!!







கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்ற பெயர் எடுத்தவர் பி.கக்கன்.தாழ்த்தப்பட்ட என்று சொல்லப்படும் சமுதாயத்தில் பிறந்த அவர்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினராகவும்,பத்து ஆண்டுகாலம் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியவர்.பல வருடங்கள் அமைச்சராக இருந்தும் சொந்த வீடு கூட இல்லாமல் தன் கடைசி காலம் வரை வாழ்ந்தார்.

மதுரை அருகில் தும்பைப்பட்டி கிராமம்.அங்குள்ள ஸ்ரீவீரகாளியம்மன் கோவிலில் கக்கன் அவர்களின் குடும்பத்தார் நான்கு தலைமுறைகளாக பூஜாரிகளாக இருந்திருக்கிறார்கள்.கக்கன் அவர்களும் பூஜாரியாக பணியாற்றியவர்;அந்தக் கோவில் 18 கிராமங்களுக்குச் சொந்தம்.
காலை விடியலுக்கு முன்பே எழுந்து,காலைக்கடமைகளை முடித்து நெற்றி நிறைய விபூதி பூசிக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்;பாவக்காரியங்கள் செய்யக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தவர்;இவரின் இந்தக் கொள்கைதான் கறைபடியாத கரங்களுக்குசொந்தக்காரர் என்ற புகழைத் தந்திருக்கிறது.
நன்றி:பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம் 10,விஜயபாரதம் 9.9.11






No comments:

Post a Comment