Thursday, September 1, 2011

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைகள்



பணக்காரன் வீட்டு வேலைக்காரி அந்த வீட்டின் வேலைகளை செய்தாலும், அவளுடைய சிந்தனையெல்லாம் தன் வீட்டின் மீதே இருக்கும். எஜமானனின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாகப் பாவித்தாலும், அக்குழந்தைகள் தனக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை அவள் உள்மனம் நன்கு அறிந்திருக்கும். அதுபோல, உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.

* மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல், பக்தியாகிய ஞானத்தை கடைந்தெடுத்தால் உலகமாகிய நீரில் மிதக்கலாம். உலகத்துடன் கலக்காமல் தனித்து நிற்கும் வலிமை உண்டாகும்.

* தெரிந்து சொன்னாலும், தெரியாமல் சொன்னாலும், தன்னறிவில் சொன்னாலும், அறியாமல் சொன்னாலும், எந்த நிலையில் சொன்னாலும் பகவான் நாமத்தைச் சொன்னதற்கான பலன் ஒருவனுக்கு நிச்சயம் உண்டு. அப்படி சொல்லும்போது மலையளவு பாவங்கள் குவிந்திருந்தாலும், பஞ்சுப்பொதி மீதிட்ட நெருப்பினை போல் எரிந்து சாம்பலாகி விடுm





மனிதர்கள் பெண்ணாசையும், பணத்தாசையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணமே தீராத நோயாக அவர்களைப் பீடித்திருக்கிறது. இதிலிருந்து விடுபட நல்லவர்களோடு பழகுவது தான் சரியான தீர்வு.

* சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும். அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல, எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்குள் ஆன்மிக விஷயம் எதுவும் உள்ளே போகாது.

* மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடுதல் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.

* பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் தங்களுடைய செல்வத்தை சுயநலத்தால் தனக்காகவே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கஷ்டப்படுகிற ஜனங்களுக்கு உதவி புரிய வேண்டும்.

* மீன்கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள். அது நீருக்குள் மூழ்குகின்ற போது, சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும் .வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் அந்த நீரும் அகன்றுவிடும். அதுபோல உலகியலில் ஈடுபட்டாலும் பற்றற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

-ராமகிருஷ்ணர்



1 comment:

  1. Ramakrishna thoughts are really simple to follow but at that time you must have faith on it.
    Sri Ramakrishna is nothing but God. His explanations are easy to understand. IF YOU are ready to follow it no need to worry about future.

    ReplyDelete