இந்த பதிவின் ஒரு பகுதியாக இருப்பது பத்திரகாளியம்மாளின் புகைப்படம்.சென்ற ஆவணிமாதம் பவுர்ணமிபூஜையன்று,பவுர்ணமி பூஜை நிறைவடைந்த நேரத்தில் எடுக்கப்பட்டது இந்தப்புகைப்படம்.
இதை உங்களின் கணினியின் முகப்பை அலங்கரிக்கும் விதமாக வைத்துக்கொள்ளலாம்;அல்லது இதை கலர் இங்க் ஜெட் பிரிண்டர் மூலமாக பிரிண்ட் எடுத்து ,ஃபிரேம் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
தினமும் காலையில் குளித்து,வேலைக்கு அல்லது தொழிலகத்துக்குப் புறப்படும் முன்பாக இந்த பத்திரகாளியம்மாளின் போட்டோவின் முன்பாக நின்று கொண்டு(முடியாதவர்கள் அமர்ந்துகொண்டு) மனதுக்குள் உங்களுக்கு என்ன வேண்டும்? என்பதை வேண்டுங்கள்.(இந்தக் கோரிக்கையை எவரிடமும் எக்காரணம் கொண்டும் பகிர்ந்துகொள்ளக் கூடாது)
15 நாட்கள் கடந்ததும் என்ன உணருகிறீர்கள்?
45 நாட்கள் கடந்தபின்னர் என்ன நடக்கிறது?
90 நாட்கள் கடக்கும் முன்பாக,நீங்கள் புரிந்துகொண்டது என்ன? ஆன்மீகக்கடலுக்கு எழுதுங்கள்.
குதர்க்கம் பேசும் நாத்திகக் கிறுக்கர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? அவனுங்களால் அவனுங்களுக்கே பிரயோஜனம் கிடையாது.நாம் நமது உள் நோக்கிய ஆன்மீகப் பயணத்தை,ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியை வீட்டிலிருந்தே வழிபடுவதன் மூலமாக ஆரம்பிப்போம்.
கொஞ்சம் காதைக் கொடுங்கள்:ஒரு மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளிகோவில் பவுர்ணமிபூஜைக்கு வந்து கலந்து கொண்டாலே,அடுத்த நாளிலிருந்தே,நமது வாழ்க்கையில் அதிரடியான / நாம் எதிர்பார்க்கும் மாறுதல்கள் நடைபெற்றுவருகின்றன.
எல்லாருக்கும் பத்திரகாளி அருள் புரியட்டும்
ReplyDelete