மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள்.இவர்கள் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறையும்.இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.இந்த தெய்வீக ரகசியம் கடந்த 20 நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்தது.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்குத் தந்தருளியவர் மிஸ்டிக் செல்வம்,ஆன்மீக ஆராய்ச்சியாளர்,தென்காசி அவர்கள்.
1.நமது முன் ஜன்ம வினைகள் நமது பிறந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.அந்த கடுமையான கர்மவினைகளே திருமணத் தாமதம்,படிப்புக்கேற்ற/திறமைக்கேற்ற/அனுபவத்திற்கேற்ற சம்பளம் கிடைக்காமை,குடும்ப ஒற்றுமையின்மை என ஏதாவது ஒரு குறையிருக்கும்.இந்தக் குறை நீங்கத்துவங்கும்.அதாவது ஒரே நேரத்தில் நமது கஷ்டங்கள் குறையும்;அப்படி குறையக் குறைய வருமானம் அதிகரிக்கும்.
2.நமக்கு வர வேண்டிய பணம் தானாகவே வரத்துவங்கும்.
3.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமளவுக்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
4. இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி அல்லது தொழில் வளர்ச்சி அல்லது வியாபார முன்னேற்றம் அல்லது குடும்ப ஒற்றுமை(எது நமது ஏக்கமோ அந்த ஏக்கம் தீரத்துவங்கும்) ஏற்படும்.
நாளை தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கிறது.நாளை ராகு காலம் மாலை 3.00 முதல் மாலை 4.30 வரை வருகிறது.செவ்வாய்க்கிழமை இல்லையா?
தமிழ்நாட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கும் கோவில்களின் பட்டியல் மீண்டும் ஒருமுறை:
1.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 வது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
2.தேவக்கோட்டை அருகில் தபசு மலையில் இருக்கிறார்.
3.காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் இருக்கிறார்.
4.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜாரில் தனி கோவிலில் அருள் பாலித்துவருகிறார்.
5.சிதம்பரத்தில் இருக்கிறார்.
6.காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் இருக்கிறார்.
7.சென்னை தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்தக் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தால்,செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்.
ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமிக்குச் சென்று வந்தாலே,அடுத்த ஒரு மாதத்திற்குள் எதிர்பாராத (நியாயமான)வருமானம் கிடைக்கிறது அல்லது நீண்டகாலக் கடன் தீர்ந்துவிடுகிறது.டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா?
பின்குறிப்பு:தமிழ் பேசத் தெரிந்த ஒவ்வொருவரும் செல்வச் செழிப்போடும்,வறுமையின்றியும் கர்மவினையின்றியும் ,நிம்மதியோடும் வாழ வேண்டும்.அதற்காகவே இந்தப் பதிவு!!!
பசியோடு தினமும் போராடுபவனுக்கு ஆன்மீகத்தைப் போதிப்பதால் என்ன பயன்?
மற்ற நாடுகளிள் வசிப்பவர்கள் எப்படி?
ReplyDelete