Sunday, July 17, 2011

மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி :re post from 31.3.2010

இந்துமதத்தின் பாரம்பரிய வைத்தியமுறைகளில் ஒன்று நியூரோதெரபி ஆகும்.இது ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது.இதை நவீன்ப்படுத்தியவர் டாக்டர்.லஜ்பத்ராய் மெஹ்ரா ஆவார்.



இவர் கி.பி.1923 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார்.சிறுவயதிலிருந்தே இவருக்கு இயற்கை வைத்தியத்தில் ஆர்வம் இருந்தது.அவரது 11 ஆம் வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அவரை நியூரோதெரபியைக் கண்டுபிடிக்க உதவியது.



லஜ்பதி மெஹ்ராவின் 11 ஆம் வயதில் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.அவரது ஊரில் வயதான பெண்மணி, “உனக்கு நாபி(தொப்பூள்)ப்பகுதி உறுப்பு சரியாக வேலை செய்யவில்லை”என்றார்.இதை அந்தப்பெண்மணி நமது பாரம்பரிய முறையான வர்மக்கலை முறையில் லஜ்பதி மெஹ்ராவுக்குச் சிகிச்சையளித்தார். உடனே,அந்த பெண்மணியின் வர்ம சிகிச்சையால் வயிற்றுவலி சரியானது.





அதிலிருந்து லஜ்பதி மெஹ்ராவுக்கு வர்மக்கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.அனைவருக்கும் தனது வர்மக்கலையால் வயிற்றுவலி,முதுகுவலி,கை கால் வலி இவைகளைச் சரி செய்தார். பின்னர், மும்பை வந்து வீட்டிலேயே வர்மக்கலையை செய்துவந்தார்.



பல லட்சம் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.மும்பை வந்த அவர் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு, செட்டில் ஆனார்.பின்னர் வர்மக்கலை சிகிச்சைக்கு நியூரோ தெரபி என பெயர் சூட்டினார்.



கி.பி.1965 முதல் முழுநேர நியூரோதெரபி மருத்துவம் செய்துவந்தார்.

கி.பி.1982 இல் மும்பையில் மாந்ரா பகுதியில் மருத்துவமனை ஆரம்பித்தார்.



கி.பி.1992 இல் மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூர்யமால் என்ற ஆதிவாசி மலைப்பகுதியில் நியூரோதெரபி அகாடமி துவங்கினார்.நாடு முழுவதும் உள்ள சேவாபாரதி அமைப்பு குருஜியிடம் தொடர்பு கொண்டு நியூரோதெரபி கற்றுக்கொண்டு ,நியூரோ தெரபி இந்தியா முழுவதும் பரவிவருகிறது.



கி.பி.2007 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச அரசாங்கம் நியூரோதெரபியை அங்கீகாரம் செய்து கிராம சுகாதார நிலையங்களில் நியூரோதெரபிஸ்டுகளைப் பணியமர்த்தியுள்ளது.ஆங்கில மருந்து,மாத்திரைகளைக் குறைத்து நியூரோதெரபி சிகிச்சையளித்து வருகிறது.



தமிழ்நாடு முழுவதும் பல நியூரோ தெரபிஸ்டுகள் சேவையாற்றி வருகின்றனர்.

நன்றி: உங்கள் உடலே உங்களுக்கு மருந்து நியூரோதெரபி (மருந்தில்லா மருத்துவம்) எழுதியவர் டாக்டர்.லஜ்பதி மெஹ்ராஜி,மும்பை.தமிழில் டாக்டர் பா.விஜய் ஆனந்த்,திருச்சி.cell :8124879155

No comments:

Post a Comment