கேள்வி:உங்கள் வீட்டு சாப்பாடு மிக நன்றாக இருந்தது.மிக்க நன்றிகள்.
பதில்:தமிழர்களின் பண்பாடு வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பதுதானே! இதற்கெல்லாம் நன்றிகள் சொல்லி நம்மை பிரித்துப்பார்க்காதீர்கள்.
கேள்வி:ஓ! . . . ஸாரி,ஸாரி சார்.
பதில்:இது கூட மேல்நாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கம் தான்.குற்ற உணர்ச்சியைக் கைவிடுங்கள்.
கேள்வி:உலக மயமாக்கல் பற்றி சொல்லுங்கள்.
பதில்:நமது ஆன்மீகக்கடலின் 2010,2011 ஆம் ஆண்டு பதிவுகளை வாசியுங்கள்.போதுமான அளவுக்கு விவரித்திருக்கிறேன்.மேலும்,பல பதிவுகள் வர இருக்கின்றன.
தவிர, உலகமயமாக்கல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள் எனில்,பின்வரும் முகவரிக்கு ஆண்டுச்சந்தா அனுப்பவும்.
கேள்வி:அது என்ன பத்திரிகை?
பதில்:சுதேசிச் செய்தி என்பது அந்த மாத இதழின் பெயர்.சுதேசி விழிப்புணர்வு இயக்கம்,தமிழ்நாடு இந்த மாத இதழை நடத்திவருகிறது.தனிப்பிரதி ரூ.7/-ஆனால்,கடைகளில் இந்த இதழ் பெரும்பாலும் கிடைப்பதில்லை;ஆண்டுச்சந்தா ரூ.75/- முகவரி:swadeshiseithi@yahoo.co.in செல் எண்:திரு.இராம.நம்பி நாராயணன் 94431 40930.
ஒவ்வொரு மாதமும் இந்த சுதேசிச் செய்தி மாத இதழில் வெளிவரும் அத்தனை செய்திகளையும் வெளியிட விரும்புகிறேன்.அதற்கு நேரம் அமையவில்லை;பொருளாதாரம் பற்றிய இந்தியாவின் சாதனைகளையும்,அந்த சாதனைகளைச் சிதைக்க வெளிநாடுகள் எப்படியெல்லாம் இந்திய அரசை வளைக்கின்றன? அதை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் எப்படி எதிர்கொள்கிறது? என்பதை விரிவாக,விளக்கமாக மாதம் தோறும் வெளியிட்டுவருகிறது.
கேள்வி:இருந்தாலும் உலகமயமாக்கலைப் பற்றி கொஞ்சம் சொல்லக்கூடாதா?
பதில்: டைனோசரை தீப்பெட்டிக்குள் அடைக்க ஆசைப்படுகிறீர்கள்.சரி,முயலுவோம்.
உலகப் பொருளாதார மந்தம் மீண்டும் உலகை அச்சுறுத்தாமல் இருப்பதற்காக 1945 ஆம் ஆண்டு ஆர்தர் டங்கல் என்பவர் உருவாக்கிய திட்டமே இன்று குளோபலிஷேசன் என்ற பெயர் தாங்கி,உலக நாடுகளை வியாபார ரீதியில் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.நோக்கம் என்னவே பேப்பரில் நன்றாக இருக்கிறது.ஆனால்,நடைமுறையில்,அமெரிக்காவும்,ஐரோப்பாவும் வெகுவிரைவில் பரம ஏழைநாடுகளாகப் போகின்றன.அப்படிப் போகும் முன்பு,உலகமயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கு உலக நாடுகளின் சட்டங்களை அழித்து,அவை பிழைக்கவும்,உலக ஏழைகளின் உழைப்பை உறிஞ்சவும் செய்யப்பட்ட விரிவான ஏற்பாடுதான் இது!
இந்தியாவில் நிர்வாண ஒளிபரப்பைத் தரும் எஃப் டிவி தடையின்றி பரவுவதற்கும்,அமெரிக்காவில் சன் டிவி தெரிவதற்கும் இந்த உலக மயமாக்கமே காரணம்.தவிர,நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் இப்போதே உள்நாட்டுத்தயாரிப்பாக இல்லை;இன்னும் பத்தாண்டுகளில் இந்திய நிறுவனங்களே உற்பத்தித்துறையில் இல்லாத சூழ்நிலை உண்டாக்விடும்.ஒருவேளை அப்படி இருந்தாலும்,அவை இந்திய பன்னாட்டு நிறுவனங்களாக இருக்கும்.
கேள்வி: கொஞ்சம் விரிவாக. . .
பதில்:புது டெல்லியில் மட்டும் 4000 குளிர்பான நிறுவனங்கள் இருந்தன.ஒரு குளிர்பான நிறுவனம் 100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு தருகிறது எனில்,4000 நிறுவனங்கள் 4,00,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பினை புது டெல்லியில் மட்டும் இயங்கும் குளிர்பான நிறுவனங்கள் கொடுத்துக்கொண்டு வந்திருக்கின்றன.இந்த 4000 நிறுவனங்களை ஒரே ஒரு பெப்ஸியும்,ஒரேஒரு கோகோ கோலா நிறுவனமும் அழித்துவிட்டது.விளைவு? 4,00,000 பேர்களுக்கு வேலை போய்விட்டது.ஒரு குடும்பத்துக்கு 4 பேர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொண்டால், 16,00,000 பேர்களுக்கு வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருக்கிறது.
நமது தமிழ்நாட்டில் வின்சென் ட் சோடா,மாப்பிள்ளை விநாயகர் போன்ற சோடா நிறுவனங்கள் எங்கே?
கேள்வி: இருக்கட்டுமே! இதனால்,நமது நாட்டுக்கு என்ன நஷ்டம்?
பதில்:நல்ல கேள்வி! ஒன்றரை லிட்டர் செவன் அப் விலை என்ன?
கேள்வி:சுமார் ரூ.40/- இருக்கும்.
பதில்:அந்த ஒன்றரை லிட்டர் செவன் அப்பை தயாரிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
கேள்வி: தெரியவில்லை.நீங்களே சொல்லுங்கள்.
பதில்:வெறும் 30 பைசாக்கள்.
கேள்வி:அது எப்பிடிங்க?
பதில்; மாஸ் புரடக்ஷ்சன் என்பது மேல்நாடுகளின் புரடக்ஷன் பாலிஸி! பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்தப்பின்னர், கிரேட் மாஸ் புரடக்ஷன் என்பது இந்தியாவுக்கான பாலிஸி!!!
கேள்வி: 30 பைசாவுக்கு தயாரித்து 45 ரூபாய்க்கு விற்கிறார்களே,ஏஜண்டுகளுக்கு கமிஷன் நன்றாகக்கிடைக்குமே
பதில்: உரத்துச் சொல்லிவிடாதீர்கள்.ஏஜண்டுகள் உங்களை உதைக்க வந்துவிடப்போகிறார்கள்.இன்னொரு உண்மையைக் கேளுங்கள். உலக மென்பொருள் ஜாம்பவான் மைக்ரோசாப்ட். . .
கேள்வி: ஆமாமா,நம்ம பில் கேட்ஸ் கம்பெனி
பதில்:(கிண்டலாக) நம்ம பில் கேட்ஸ் அல்ல;ஒரு விண்டோஸ் ஓ.எஸ்.ஸின் விலை இந்தியாவில் ரூ.4500/-அதே ஓ.எஸ்ஸின் விலை அமெரிக்காவில் ரூ.200/- நம்ம பில்கேட்ஸ்தான் இதையெல்லாம் செய்கிறார்.
கேள்வி: இது உண்மையாக இருந்தால் ஸ்பெக்ட்ரம் கொள்ளையை விட அநியாயமாக இருக்குதே!
பதில்: இதை எதிர்த்து,சில ஆண்டுகளுக்கு முன்பு,மதுரையில் இருக்கும் கணிப்பொறி விற்பனை நிறுவனங்கள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தின.தினமலர் செய்தியாக வந்தது.
கேள்வி: நம்மை பன்னாட்டுநிறுவனங்கள் ராணுவத்தை அனுப்பாமலேயே,அசின்,விஜய்,ஷாருக்கான் போன்றவர்களை விளம்பரங்களில் நடிக்க வைத்து, அடிமைப்படுத்திவிட்டன.
அது மட்டுமல்ல; ஒரு கிறிஸ்தவர் தனது ஓராண்டு வருமானத்தில் 3% தனது கிறிஸ்தவ மத வளர்ச்சிக்காகத் தர வேண்டும் என்பது மதக்கட்டளை.பெப்ஸியும்,கோகோ கோலாவும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் குளிர்பான வர்த்தக பூதங்கள்.மேலும்,தினமும் ஒரு டீன் ஏஜ் பெண் 300 மிலி கோலா/பெப்ஸி பானங்களில் ஏதாவது ஒன்றை அருந்தி வந்தால்,வெறும் 90 நாட்களுக்குப் பிறகு,அவளின் மாதவிடாய் ஒழுங்கு கெட்டுப்போய்விடும்.அதன் பிறகு,அவளுக்கு இரண்டுமாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மாத விலக்கு வரும் என்பதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.இந்தச் செய்தி பரவாமலிக்கவும்,இது தொடர்பாக எந்த சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்காமலிருக்கவும் பல திரைமறைவு வேலைகளை இந்த நிறுவனங்கள் ஆதாரமில்லாமல் செய்து வருகின்றன.
ஜீரோ டிகிரியில் தண்ணீரானது பனிக்கட்டியாகிவிடும்.ஜீரோ டிகிரியிலும் கூட இந்த கோலா/பெப்ஸி பானங்கள் உறைவதில்லை;எதில் க்ளைக்கால் என்ற வேதிப்பொருள் இதில் சேர்க்கப்படுகிறது.இது மனித உடலுக்குள் ஏராளமான தீங்குகளை விளைவிக்கிறது.
உலக மயமாக்கலின் விளைவுகளில் இதுவும் ஒன்று.இதைத்தான் நான் கிண்டலாகச் சொல்வதுண்டு.
இந்தியாவைப்போல வேறு எந்த நாடும் குளோபலைஷேசனைப் பின்பற்றுவதில்லை;ஆமாம்! நாங்கள் எங்கள் நாட்டை ஆள்வதற்குரிய சி.ஈ.ஓ.வை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.
கேள்வி:ஹா ஹா ஹா
பதில்: ஹா ஹா ஹா
No comments:
Post a Comment