Tuesday, July 26, 2011

கும்பம்,மிதுனம்,ரிஷபம்,மகரம் ராசிகளும்,துலாம் சனிப்பெயர்ச்சியும்



30.11.11 முதல் கும்பராசிக்கு அஷ்டமச்சனி விலகுகிறது;மிதுன ராசிக்கு அர்த்த அஷ்டமச்சனி விலகுகிறது;ரிஷப ராசிக்கு சனி ஆறாமிடத்துக்கும்,மகரத்துக்கு ஒன்பதாமிடத்திலிருந்து பத்தாம் இடத்துக்கும் சனிப்பெயர்ச்சி ஆகிறது.

கும்பராசிக்காரர்களுக்கு இதுவரை இழுவையாகி வந்த பதவி உயர்வு நிச்சயமாகிவிடும்;கன்னிப்பெண்களுக்கு கல்வியில் அசுர வளர்ச்சி ஏற்படும்;திருமணத்தடை நீங்கும்;சுய தொழில் செய்துவருவோர் படிப்படியான ஆனால் உறுதியான வளர்ச்சியைப் பெறுவார்கள்.உடல்நிலை சீராகும்.உயர்கல்விக்கான இடம் கிடைக்கும்.சிறை அல்லது வழக்கில் சிக்கியவர்கள் விடுபட்டு நிம்மதியின் முக்கியத்துவத்தை அனுபவிப்பார்கள்.2013ஆம் ஆண்டில் சனி உச்சமாகப் போவதால்,மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் அவரவர் துறைகளில் கொடிகட்டிப்பறப்பார்கள்.உலகெங்கும் நீதி நிலைநாட்டப்படும்.

மிதுனராசிக்காரர்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழில் கிட்டும்.எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் உதவிகள் கிடைத்து,விறுவிறு வளர்ச்சியைக் காண்பார்கள்.எனவே,இந்த ராசிக்காரர்கள் சேமிக்கத்துவங்கலாம்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment