Wednesday, July 6, 2011

கழுகார் கேள்வி பதில்:ஜீனியர் விகடனிலிருந்து(10.7.11)




கே:நமக்குள்ளே பேசிக்கொள்வோம். . . இவ்வளவு பெரிய ஸ்பெக்ட்ரக் நடப்பது உண்மையிலேயே பிரதமருக்கும் சோனியாவுக்கும் தெரியாமலா இருக்கும்?

பதில்: உங்களது கேள்வியிலேயே ரகசியம் தேவை இல்லை.ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்ததுமே, “இவ்வளவு பெரிய விஷயத்தை தனிப்பட்ட ராசா மட்டும் செய்திருக்க முடியுமா?” என்று கருணாநிதியே கேட்டுவிட்டார்.பிரதமருக்குத் தெரிந்தே அனைத்தும் நடந்தன என்பதுதான் ஆ.ராசா வைக்கப்போகும் வாதம்.இந்த விவகாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு தலை,மறைக்கப்பட்டுள்ளது.சோனியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் நபரைக் கைவைத்தால்தான்,வழக்கு முழுமை அடையும் என்பதே டெல்லித் தகவல்!



(ஆன்மீகக்கடல் ஏன் சோனியாவை,சோனியாவின் நடவடிக்கைகளை கண்டிப்பதன் மர்மம் புரிந்திருக்குமே!)



கே:டீசல் விலையை உயர்த்தியும்கூட எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம்?



பதில்: பெட்ரோல்,டீசல் விற்பனை மூலம் கிடைக்கும் தொகை எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படுவது இல்லை.அவை வேறு துறைகளுக்கு ரகசியமாகத் திருப்பிவிடப்படுகின்றன.(ஆன்மீகக்கடலின் யூகம் அணு மின் உற்பத்தி?/ராணுவம்?/உளவுத்துறை?)



ஈரான் நாட்டுக்கு நாம் தரவேண்டிய பாக்கித்தொகையைத் தராமல் வைத்துள்ளோம் என்ற தகவல் இந்த வாரத்தில் கிடைத்துள்ளது.



சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது இந்தியா.கடந்த ஆறுமாதங்களாக அதற்கான பாக்கித் தொகையை இந்தியா தரவில்லை;இந்தப் பணத்தை உடனடியாகத் தரவில்லை எனில்,ஆகஸ்ட் மாதம் முதல் சப்ளையை நிறுத்தப்போவதாக ஈரான் சொல்கிறது.



இதை வைத்துப்பார்த்தால்,பெட்ரோல்,டீசலுக்காக நாம் தரும் தொகை எங்கே(சோனியாவின் சகோதரிகளுக்கு?) போகிறது?





கே: ‘நலத்திட்டங்கள் செய்தும் வெற்றி பெற முடியவில்லையே’ என்று மத்திய மந்திரி அழகிரி வருத்தப்பட்டு இருக்கிறாரே?



பதில்: நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்குத் தான் செய்ய வேண்டும் என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னால் நல்லது!

No comments:

Post a Comment