Wednesday, July 13, 2011

ஆடிபவுர்ணமியைப் பயன்படுத்துவோம்;


நாளை 14.7.11 வியாழன் மதியம் முதல் நாளை மறு நாள் 15.7.11 வெள்ளி மதியம் வரையிலும் ஆடிமாத பவுர்ணமி வருகிறது.

இந்த நாளில் நாம் நமது குலதெய்வம் கோவிலில் அல்லது கடலோரகோவிலில் அல்லது மலையோர கோவிலில் அல்லது பழமையான சிவாலயத்தின் வாசலில் அன்னதானம் செய்ய,நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் திருப்தியடைவார்கள்.

ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவோர்,வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் ஜபித்துவர அளப்பரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவின்படி, நாம் ஏதாவது ஒரு தியான முறை மூலமாகவோ அல்லது குறுக்குவழியிலோ நாம் விரும்பும் சித்தரை தரிசித்தால் கூட அந்த சித்தர் நம்மை ஆசிர்வாதிப்பார்.ஆனால்,அந்த ஆசிர்வாதத்தின் மூலம் நமது கர்மவினைகள் சிறிதுகூட கரையாது;

எனவே,நமது கர்மவினைகளைக் கரைக்கும் பொறுப்பு நமக்கு மட்டுமே உண்டு.அது இரண்டே இரண்டு விதங்களில் மட்டுமே அந்த பொறுப்பைநிறைவேற்ற முடியும்.

ஒன்று அன்னதானம்! மற்றது மந்திர ஜபம்!!

இதில் அன்னதானத்தை எல்லோராலும் செய்ய இயலாது.ஆனால்,மந்திர ஜபத்தை அனைவராலும் ஜபிக்க முடியும்.எனவே,நாம் இன்று முதல் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.

1 comment:

  1. Thangal valigattalukku mikka nandri. Naanum idai pinpatrugiren. ungal sevai endrum engalukku thevai kodi nandrigalodu thangal manavan

    ReplyDelete