நெவாடா : சுவீடன் நாட்டு பள்ளி ஒன்றில், இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூக்குத்தி அணிந்து சென்றதால், அனுமதி வழங்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுவீடன் நாட்டின் மத்தியில், ஓரிபுரோ என்ற இடத்தில், பொது நிதியில் இயங்கும் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் சேருவதற்காக, இந்து மதத்தைச் சேர்ந்த 13 வயது இளம்பெண் சென்றார். இவர் மூக்குத்தி அணிந்து சென்றதால், பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கவில்லை. வீட்டிற்குச் சென்று மூக்குத்தியை கழற்றி வைத்து விட்டு வந்தால் தான் அனுமதி வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பெண்ணின் தாய், பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து, அமெரிக்காவின் நெவாடா என்ற இடத்தில், சர்வதேச இந்து மதத்திற்கான தலைவர் ராஜன் ஜெட் கூறுகையில், "மூக்கு குத்திக் கொள்வது, மூக்குத்தி அணிவது இந்தியாவைச் சேர்ந்த இந்துப் பெண்களின் பாரம்பரிய வழக்கம். இந்துப் பெண் கடவுள்களும், மூக்குத்தி அணிந்து இருப்பது போன்று சித்திரிக்கப்பட்டுள்ளனர். எனவே, அந்நாட்டின் சட்டத்தில், இதற்கு திருத்தம் கொண்டு வரவேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment