மதுரையை ராணி மங்கம்மா ஆட்சி செய்து வந்த போது, மதுரையிலிருந்து, 80 கி.மீ., தூரத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலில், "ஆண்டாளுக்கு நைவேத்யம் ஆகி விட்டது...' என்று தெரிந்த பிறகு தான், ராணி, தன் சாப்பாட்டுத் தட்டிலேயே கை வைப்பார்
ராணி மங்கம்மாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சிக்னல் எப்படிப் போயிருக்கும்?'
ஒலி மூலமாகத்தான் தகவல் தரப்பட்டிருக்கும்...' காண்டாமணி மூலமாகவே அந்தச் செய்தி - அதாவது, ஆண்டாளுக்கு நைவேத்தியம் ஆன விஷயம் - ராணிக்கு சொல்லப்பட்டது...
"குறிப்பிட்ட தூர இடைவெளியில், பல காண்டாமணிகள், 80 கி.மீ., தூரத்துக்கும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு காண்டாமணியின் ஓசை, குறிப்பிட்ட தூரம் வரை கேட்கும். முதல் மணியோசை கேட்டவுடன் அடுத்த மணி அடிக்கத் தொடங்கும். இப்படியாக, சில நொடிகளிலேயே நைவேத்தியம் ஆன விஷயம், மதுரைக்கு வந்து கொண்டிருந்ததாம்...'
மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி கி.பி., 3 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியதாம்; அந்த மன்னர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. ஆனால், ஆறாவது நூற்றாண்டிலிருந்து அந்த விவரம் நமக்குக் கிடைக்கிறது. முதல் பாண்டிய மன்னனின் பெயர்: குலசேகர பாண்டியன்.
பிறகு, 1311ல் முகலாய மன்னனான அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் காபூர் மதுரையைக் கைப்பற்றினான்.
ஆனால், முகலாயர் ஆட்சி மதுரையில் நீண்ட காலம் நீடிக்கவில்லை 60 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1371ல் நாயக்கர்கள் மதுரையின் மீது படையெடுத்து வந்து, முகலாயர்களை விரட்டி அடித்தனர். அதிலிருந்து தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.
நாயக்க மன்னர்களில் பிரபலமானவர் திருமலை நாயக்கர். அவர் மதுரையை ஆண்ட காலம்: 1623 முதல் 1659 வரை. அவருக்குப் பிறகு வந்தவர் சொக்கநாத நாயக்கர். இவரது படைத் தளபதியாக இருந்தவர், தளபதி லிங்கம நாயக்கர். இவரது மகளே மங்கம்மாள்.
மங்கம்மாளுக்கும், சொக்கநாத நாயக்கருக்கும் திருமணம் நடந்தது. பிறகு, 1682ல் சொக்கநாதர் இறக்கும் போது, அந்தக் கால மரபுப்படி தன் கணவருடன் உடன்கட்டை ஏற மறுத்து விட்டார் மங்கம்மாள். பிறகு, மொகலாயர் ஆட்சி மீண்டும் தலை தூக்கி விடாமல் இருப்பதற்காக, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் மங்கம்மா. இதுதான் மங்கம்மா, ராணி மங்கம்மாவாக மாறிய கதை.
----------------------------
திருமலை நாயக்கர் அரண்மனைக்கு பின் மதுரையில் மற்றொரு அரண்மனை மதுரையில் உண்டு.. அதுதான் இராணி மங்கம்மாள் அரண்மனை...அருமையான கட்டிட வேலைப்பாட்டுடன் கூடிய அரண்மனை.... அதைத்தான் காந்தி மியூசியம் ஆக்கிவிட்டார்கள்... உள்ளே போகின்றவர்களுக்கு காந்திய பத்திதான் தெரியுமே தவிர... இராணி மங்கம்மா பற்றிய ஒரு குறிப்பு கூட கிடைக்காது....
குறிப்பாக இராணி மங்கம்மாள் சத்திரங்கள் அமைப்பதில் பெயர்பெற்றவர்... ஏதேனும் புண்ணிய ஸ்தலங்கள் அருகில் சுமார் 10-கி.மீ தொலைவில், மக்கள் இரவை கழிக்கவும், தங்கவும் வழிப்போக்கர்களுக்காக பல சத்திரங்களை ஏற்ப்படுத்தினார்... சரியாக இந்த சத்திரங்களில் இருந்து கிளம்பி ஒரே நாளில் அருகில் உள்ள புண்ணிய தலங்களை அடையலாம்... பாண்டிய நாட்டில் இன்னும் பல ஊர்களின் பெயர் சத்திரம் என்ற பெயரில் ஆரம்பிப்பது மற்றும் முடிவது எல்லாம் இவரின் கைங்கர்யம்...
மதுரை இரயில் நிலையம் எதிரே உள்ள இராணி மங்கம்மாள் சத்திரம் 300 ஆண்டுகளை கடந்து இன்றும் தங்கும் விடுதியாக மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது....
உடன்கட்டை ஏற மறுத்தாள் ராணி மங்கம்மா... அன்றே ஒரு புரட்சி பெண்
ReplyDelete