உதாரணமாக,அசுபதி,பரணி,கார்த்திகை1ஆம் பாதம்(மேஷம்) இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமியன்றும்,
கார்த்திகை2,3,4,ரோகிணி,மிருகசீரிடம்1,2ஆம் பாதம்(ரிஷபம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமியன்றும்
மிருகசீரிடம்3,4ஆம் பாதம்,திருவாதிரை,புனர்பூசம்1,2,3ஆம் பாதம்(மிதுனம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் மார்கழி மாதபவுர்ணமியன்றும்,
புனர்பூசம்4ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம்(கடகம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் தைமாதபவுர்ணமியன்றும்,
மகம்,பூரம்,உத்திரம்1ஆம் பாதம்(சிம்மம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் மாசிமாத பவுர்ணமியன்றும்,
உத்திரம்2,3,4ஆம் பாதம்,அஸ்தம்,சித்திரை1,2ஆம் பாதம்(கன்னி) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பங்குனி மாத பவுர்ணமியன்றும்,
சித்திரை3,4ஆம் பாதம்,சுவாதி,விசாகம்1,2,3ஆம் பாதம்(துலாம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் சித்திரை மாத பவுர்ணமியன்றும்,
விசாகம்4ஆம் பாதம்,அனுஷம்,கேட்டை(விருச்சிகம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் வைகாசி மாத பவுர்ணமியன்றும்,
மூலம்,பூராடம்,உத்திராடம்1ஆம் பாதம்(தனுசு) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் ஆனி மாத பவுர்ணமியன்றும்,
உத்திராடம்2,3,4ஆம் பாதம்,திருவோணம்,அவிட்டம்1,2ஆம் பாதம்(மகரம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் ஆடிமாத பவுர்ணமியன்றும்,
அவிட்டம்3,4ஆம்பாதம்,சதயம்,பூரட்டாதி1ஆம்பாதம் (கும்பம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் ஆவணி மாத பவுர்ணமியன்றும்,
பூரட்டாதி2,3,4ஆம்பாதம்,உத்திரட்டாதி,ரேவதி(மீனம்) நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமியன்றும்
பின்வருமாறு ஏதாவது ஒரு இடத்தில் அன்னதானம் தொடர்ந்து செய்துவர,வாழ்க்கையில் முன்னேற்றமில்லாத நிலை மாறும்.தோஷங்கள்,சாபங்கள்,கண் திருஷ்டி நீங்கிடத் துவங்கும்.
1.உங்களின் குலதெய்வக்கோவில்
2.உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் அம்மன் கோவில் அல்லது உங்களின் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயம்
3.நதிக்கரையோரம் அல்லது கடலோரம் அல்லது மலைமீதிருக்கும் எந்தக் கோவிலாக இருந்தாலும்,
4.சதுரகிரி அல்லது அண்ணாமலை அல்லது பர்வதமலை
இவ்விடங்களில் சமையல் செய்து அன்னதானம் செய்தால் 100% புண்ணியமும்,கடையில் வாங்கிக்கொடுத்தால் 70% புண்ணியமும்,உங்களின் ரத்த உறவினர் நீங்கள் கொடுத்த பணத்தினைக் கொண்டு கடையில் வாங்கிக்கொடுத்தால் 60% புண்ணியமும்,பிறர்(தனி நபர்,அறக்கட்டளை) வாங்கிக்கொடுத்தால் 50% புண்ணியமும் உங்களை வந்துசேரும்.
ஒரே ஒருமுறை அவ்வாறு அன்னதானம் உரியவர்கள் செய்ததும், அவர்களின் நீண்டகாலச் சிக்கல் தீர வழி கிடைக்கும்.இது அனுபவத்தில் கிடைத்த உண்மை.
இன்னும் விரைவாக, நீங்கள் வாழ்க்கையில்/தொழிலில்/வேலையில்/சேவைத் தொழிலில்/பார்க்கும் அரசுப்பணியில் முன்னேற வேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் வரும் உங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று இவ்வாறு அன்னதானம் செய்யலாம்.அன்னதானத்தில் ஒருபோதும் அசைவம் இருக்கக் கூடாது;கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்யக்கூடாது;வீடுவாசல் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்யக்கூடாது.வேண்டா வெறுப்பாக அன்னதானம் செய்யக்கூடாது.
அல்லது
நமது ஆன்மீகக்கடலில் துவாதசி திதி வரும் நாட்களின்பட்டியலைக் கொடுத்துள்ளோம்.அந்த நாட்களில் ஏதாவது ஒரே ஒரு நாளில் அண்ணாமலைக்கு வருகைதந்து மூன்று வேளைகளில் அன்னதானம் செய்ய வேண்டும்.இதுபற்றிய முழுக்கட்டுரை நமது ஆன்மீகக் கடல் வலைப்பூவைத்தவிர,தமிழ்நாட்டிலிருந்துவெளிவரும் ஜோதிட மாத இதழ்களான பி.எஸ்.பி.யின் விடியல்,ஜீவ ஜோதிடம் இவற்றில் அடிக்கடி வெளிவந்துகொண்டிருக்கின்றன.துவாதசிதிதி அன்னதானம் மிகவும் உயர்வானது;சிறந்தது;பல பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களுக்கே துவாதசிதிதியன்று அன்னதானம் அண்ணாமலையில் செய்யும் பாக்கியம் ஏற்படும்.இந்த வலைப்பூவை வாசிப்பதன்மூலமாக இந்த செய்தியை அறியும் பாக்கியத்தை அறிந்துள்ளீர்கள்.முயற்சி செய்து ஒரே ஒருமுறை துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்ய முயலுங்கள்:::
அயல்நாடுகளில் இருப்போர்கள் ஆண்டுக்கொருமுறையாவது திரு அண்ணாமலைக்கு நேரில் வருகை தந்து அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment