Wednesday, July 20, 2011

காராம் பசு

''காராம் பசு என்பது தனி இனம் கிடையாது. நாட்டு இன மாடுகளுக்குப் பிறக்கும் கன்றுக் குட்டிகளில் நாக்கு முதல் மடிக்காம்பு வரை முழுவதும் கருப்பாக உள்ள பசுக்கள் 'காராம் பசுக்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இவை போடும் கன்றுகள்கூட சமயங்களில் 'காரம் பசு'வாக இருப்பதுண்டு. இப்படி அரிதாகப் பிறக்கும்,






வெளிநாட்டு கலப்பின பசுக்கள் கருப்பாக இருந்தாலும் அது காராம் பசுவாக முடியாது. காரம் பசு என்பது நாட்டு மாடு வகையில் தோன்றுவது.





இந்தப் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பால் கெட்டியாகவும், இதிலிருந்து தயாரிக்கப்படும் நெய், வாசனையுடனும் இருக்கும் என்பது ஆச்சரியமான செய்தி. முற்காலங்களில் புகழ் பெற்ற கோயில்களில் காராம் பசுவின் பாலில்தான் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். இன்றும்கூட காராம் பசுவின் பாலை வழிபாட்டுக்கு பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.



இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் ஐந்துக்கு மேல் காரம் பசுக்கள் இருப்பதே அரிதுதான். அதனால்தான் அந்த பசு மாடு ஒன்றின் விலை 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. தாராபுரம் பகுதியில் சில விவசாயிகள் காராம் பசுவை வளர்த்து வருகிறார்கள்.( அதிக பால் உற்பத்தியே பிரதானமாக கொண்டு அனைவரும் செயல்படுவதால் நாட்டுமாடுகள் எல்லாம் கேரளாவுக்கு அடிமாடாய் போய் இன்று தெய்வீக பசுக்களே குறைந்து போயிற்று...)





மற்ற மிருகங்களின் பால் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும்படியாக இல்லை. கழுதையின் பால் வேண்டுமானால் மருத்துவத்திற்காக ஒரு பாலாடை அளவிற்கு மட்டுமே கொடுக்கும் படியாக உள்ளது. எனவே தினசரி குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு பசும் பால் உள்ளது. மேலும், சைவமாக இருப்பதாலும், சாதுவாக இருப்பாலும், நமக்குப் பயன்பாடாக இருப்பதாலும் அதனை நாம் உடன் வைத்திருக்கிறோம்.







பசுவின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்காகவே பயன்படுகிறது. உதாரணமாக தன் இரத்ததை அது பாலாக மாற்றித் தருகிறது. அதன் கொம்புகள் பல்வேறு பயன்பாடுகளுக்கும், அதன் தோல் மேளம் செய்வதற்கும் உதவுகிறது. தன்னலமற்றவர்களை உலகம் வணங்கும் என்பதற்கு பொருளாகவே பசுவை வணங்குவதை இந்து மதம் போதித்துள்ளது.



தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குணமும், புரதங்களும் பசும் பாலில்தான் உள்ளது. ஆட்டுப் பாலில் கூடுதலான புரதங்கள் இருப்பதாக அறிவியல் நிரூபித்தாலும், அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் பசும்பால் உடனடியாக செரிக்கும்.



இதிலும் காராம் பசு வகை சில ரக புற்களை மட்டுமே உணவாகக் கொள்ளும். மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும் அது உண்ணும். கடைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது. காராம் பசு தவிடு, புண்ணாக்கு உள்ளிட் டவை கலந்த புளித்த நீரை குடிக்காது.





சாதாரண வகை பசுவுக்கும், காராம் பசுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புராணங்களில் கூறப்பட்டுள்ளது போல் இறைவனில் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்தது காராம் பசுவே. பல கோயில்களின் ஸ்தல வரலாற்றில் இவை கூறப்பட்டிருக்கும்.



தெய்வத்தன்மை உடைய காராம் பசுவின் பால் சுவையும், மருத்துவ குணங்களும் உள்ளதாக இருக்கும். இதற்கு காரணம் மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும அது உண்ணும். சந்தைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது.



தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவை கலந்த புளித்த நீரைக் கூட காரம் பசு குடிக்காது. இயற்கையாக கிடைக்கும் தண்ணீரைத்தான் அது குடிக்கும்.



இதன் காரணமாகவே அதன் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.



இதேபோல் பசுவின் சிறுநீரும் (கோமியம்) மருத்துவ குணம் மிக்கதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே கிரஹப் பிரவேசத்தின் போது வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதையும், பசுவை வீட்டைச் சுற்றில் வலம் வரை வைத்து அதனை வீட்டிலேயே சிறிநீர் கழிக்க வைப்பதையும் இந்து மதத்தினர் கடைப்பிடிக்கின்றனர். இதன் காரணமாக அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.





நகரத்தில் உள்ள பசுக்கள் போஸ்டர்களை தின்று விட்டு பால் கறக்கிறது. அதனைப் பருகுவதால் வேண்டுமானால் நோய் வரலாம். ஆனால் காராம் பசுவின் பால் எந்தக் கெடுதலும் செய்யாது.



பதப்படுத்தப்பட்ட பால் என்று விற்பனை செய்யப்படுவது சுத்தமான பசுவின் பால் கிடையாது. அதில் எருமைப்பால் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் காராம்பசுவின் பாலை குடித்தால் எந்த நோயும் வராது.

No comments:

Post a Comment