Tuesday, July 26, 2011

புத்தகங்கள் பீரங்கிகளை விட வலிமையானவை!!!




ஜீலியஸ் சீசர் கிரேக்க நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறான்.கிரீஸ் துறைமுகத்தில் அவனது போர்க்கப்பல்கள் நங்கூரமிடுகின்றன.ஆனால்,அந்த நாட்டினர் முகங்களில் போர் அச்சம் துளிகூட இல்லை;ஒரு வேளை படைபலம் பெரிதாக இருக்குமோ என்று தனது படைத்தலைவனிடம் கேட்கிறான்.படைத்தலைவன் ஒற்றர் பிரிவுக்கு இதற்கான விடையைக் கண்டறியுமாறு பணிக்கிறான்.சில நாட்களில் விபரம் தெரிகிறது.

அலெக்ஸாண்டரியா நகரத்தில் ஒரு நூலகம் இருக்கிறது.அங்கே பல லட்சம் நூல்கள் இருக்கின்றன.அவற்றைக் கற்றுணர்ந்த மக்கள்,அதன் மூலம் பெற்ற தெளிந்த அறிவினால்,நிலைகுலையாத மனப்பக்குவத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதே அந்த உளவுப்பிரிவின் முடிவு.

படைத்தலைவன் சிரிக்கிறான்.சீசர் சிரிக்கவில்லை;ஆயுத பலத்தை சமாளித்துவிடலாம்;அறிவுபலத்தை சமாளிக்க முடியாது என்பதை உணர்கிறான்.பிறகு துவங்கிய போரில் அவன் முதன்முதலில் அழித்தது அந்த நூலகத்தைத் தான்!!!

புத்தகங்களை அழிப்பதன் மூலம் ஒரு சமூகத்தை குருடாக்கிவிடலாம்.பெண்களை அழிப்பதன்மூலம் ஓர் இனத்தை மலடாக்கிவிடலாம்.

இலங்கையில் இரண்டும் நிகழ்ந்திருக்கிறது.குள்ள நரி ராஜபக்சே பரம்பரையினர் யாழ்ப்பாணத்தில் தமிழ் நூலகத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினர்.சீன அடிமை ராஜபக்சேவை கொடும்பாவியாக எரிக்க விடாமல் தமிழறிஞரின் சுயநல அரசியல் தடுத்திருக்கிறது.இலங்கையில் வாழும் நமது சகோதரிகளை வன்புணர்ச்சி செய்து,புதிய கலப்பினத்தை உருவாக்கிவருகிறான் பிசாசு மகன் ராஜ பக்ஷே!!!

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment