.பிரார்த்தனை என்பதன் பொருள் என்ன?
‘அர்த்தனே,பிராக்’ அதாவது ‘தேவையை முன்கூட்டியே கேட்பது’இதுதான் பிரார்த்தனை.இதில் பலவிதபிரார்த்தனைகள் உண்டு.பழனி முதலான கோவில்களில் மொட்டை போடுவது ஒரு வகை;ஹோமம் செய்வது என்பது இன்னொரு வகை.
பிரார்த்தனை என்பது பக்தியில் அடிபட்டுப்போகிறது.அதாவது,தீவிர பக்தியைக் கொண்டுள்ள எவருக்கும் பிரார்த்தனை அவசியமில்லை.அவனுக்குத் தேவையானது தானாகவே நடக்கும்.பக்தியோடிருந்தால் போதும்.
கலியுகத்தில் எப்படிப்பட்ட பிரார்த்தனை அவசியம்?
நாம சங்கீர்த்தனம்.இதுதான் சிறந்த வழி.இதன் மூலம் பக்தியைத் தீவிரப்படுத்தினால் நிச்சயம்பலன் கிடைக்கும்.தீவிர பக்தியைக் கொண்டவனுக்கு பிரார்த்தனை அவசியமில்லை.கனவு நாமசங்கீர்த்தனம் இதுதான் தேவை.சண்டி ஹோமம் செய்யும் போது தேவிமஹாத்மியம் படித்தால் பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.13 பகுதிகள் உள்ளன.இதனை உன்னை வருத்திக்கொண்டே பக்தியுடன் சொன்னால் நிச்சயம் பலன்கிடைக்கும். சந்தேகத்துடன் செய்வதுதான் பிரார்த்தனை.நிச்சயமாகக் கிடைக்கும் என்பதுதான் பக்தி!!!
No comments:
Post a Comment