Saturday, September 12, 2009

மறுபிறவியற்ற நிலைக்குச் செல்ல உதவும் அன்னதானம்



நீங்கள் மீண்டும் பூமியில் மனிதனாகப் பிறக்காமல் இருக்க விருப்பமா?
சகல சுக போகங்களையும் அனுபவித்துவிட்டீர்கள் எனில் இந்த ஆசை வரலாம்.அல்லது கஷ்டம், வேதனை, அவமானம், பசி, நோய், ஏமாற்றம், கண்ணீர், அங்கீகாரமின்மை என வினாடிதோறும் சிரமப்படுபவர்களுக்கும் இந்த எண்ணம் உருவாகும்.

உதாரணமாக, நாம் மரணமடையும் போது எதை நினைத்து இறக்கிறோமோ, அதுவாகவே மீண்டும் பிறக்கிறோம்.முற்பிறவியில், அயோத்தி சக்கரவர்த்தி தசரதர் “ஹே ! ராமா” என தனது மகனை நினைத்து இறைவனடி சேர்ந்தார்.
அவர் மன்னனாக இருந்த போது செய்த ஏராளமான புண்ணியசெயல்களால் 17,50,000 ஆண்டுகள் கழித்து(முதல் யுகமான கிருதயுகம் முடிந்து நான்காம் யுகமான கலியுகத்தில்) மீண்டும் மனிதனாக பிறந்தார்.அப்போது அவர் ராம்சந்தர் என்ற பெயரில் பிறந்தார்.தமிழ்நாட்டை ஆளும் மன்னனாக மாறினார்.அவர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற நமது புரட்சித்தலைவர்.

இப்படி மீண்டும் மனிதனாக நாம் பிறக்காமலிருக்க அன்னதானம் செய்துவருவது ஒரு ஒப்பற்ற வழிமுறையாகும்.
சாதாரணமாக , எந்த ஒரு வியாழக்கிழமையன்றும் ஒரு மனிதனுக்கு ஒரு முறை உணவளித்தாலே மறுபிறவியில் நாம் மன்னனாக பிறப்போம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஏழரைச்சனி(தற்போது சிம்மம்,கன்னி,துலாம் ராசிக்காரர்களுக்கு), அஷ்டமச்சனி(26.9.2009 முதல் 15.11.2011 வரை கும்பராசிக்காரர்களுக்கு), கண்டகச்சனி(26.9.2009 முதல் 15.11.2011 வரை மீன ராசிக்காரர்களுக்கு) நடப்பவர்கள் சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடாமல் இருக்கவேண்டும்.சனிக்கிழமைகளில் அனாதை அல்லது உடல் ஊனமுற்றோர் அல்லது முன்பின் தெரியாதவர் இவர்களுக்கு ஒரு வேளை மட்டுமாவது அன்னதானம் செய்துவந்தால் சனியின் இம்சை பெருமளவு குறையும்.

புராதனமான கோவில்களில் அன்னதானம் செய்தால் அது மிகப்பெரும் புண்ணியமாகும்.
காசியில் ஒருவருக்கு ஒருநாளுக்கு செய்யப்படும் அன்னதானம் மற்ற இடங்களில் ஒரு லட்சம் பேருக்குச்செய்யும் அன்னதானத்துக்குச் சமமானது.

திருஅண்ணாமலையில் ஒரு மனிதனுக்கு ஒரு நாளுக்கு செய்யும் அன்னதானமானது காசியில் ஒரு கோடி பேர்களுக்குச்செய்யும் அன்னதானத்துக்குச் சமமானது.

துவாதசி திதியன்று திருஅண்ணாமலையில் ஒருவருக்கு ஒரு நாளில் செய்யும் அன்னதானமானது (அன்னதானம் செய்பவரின்) ஆயுள் முழுவதும் செய்த செய்யும் அன்னதானத்துக்குச்சமம்.மேலும் அன்னதானம் செய்தவர் மீண்டும் இந்த பூமியில் பிறக்கமாட்டார்.
நன்றி:அருணாச்சல புராணம்

No comments:

Post a Comment