வலைப்பதிவை ஹேக்கர்களிடமிருந்து காப்பற்றிக்கொள்ள ஓர் வழி
உங்களது வலைப்பதிவனை ஹேக் செய்ய,உங்களது மின்னஞ்சல் ஊடாகவே ஹேக்கர்கள் உள்ள புக முடிகிறது.அதனால் வேறொரு மின்னஞ்சல் முகவரியை இணைப்பது எப்படி என்பதை,எனக்கு தெரிந்த அளவில் இங்கே சொல்லிருக்கிறேன்.அப்படி மின்னஞ்சலை இணைப்பதன் மூலம் ஒரு மின்னஞ்சல் ஹேக் செய்ய பட்டாலும்,மற்றொரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை காப்பற்றிக்கொள்ள முடியும்.
அதற்கான வழிமுறைகள்:
உங்களது வலைப்பதிவினை Login செய்ததுடன், Dashboard சென்று, அங்கு Settings ஐ Click செய்யவும்.
Settings இல் கடைசியாக உள்ள Permissions என்ற Tab ஐ Click செய்து விடவும்.
பின், Permissions Tab பக்கத்தில் ADD AUTHORS Tab ஐ கிளிக் செய்து உங்களது நண்பரையோ அல்லது உங்களின் வேற மின்னஞ்சல் முகவரி தந்து Invite செய்து கொள்ளுங்கள்.
பின் நீங்கள் Invite செய்த மின்னஞ்சலுக்கு அந்த Invitation வந்துவிடும்.அந்த மடலில் அதற்கான சுட்டியும் சேர்ந்து வரும்.அந்த Link ஐ Click செய்தால் Blogger page திரையில் தோன்றும்.
இதில் கேட்கப்படும் Username,Password போன்ற தகவல்களை அளித்து Accept Invitation ஐ Click செய்யவும்.
பின்பு சென்று உங்களது ஏற்கனவே உள்ள உங்களது Blogger Settings - Permissions பக்கத்தில் Grant admin privileges என்பதை Click செய்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் Admin தரமளித்து பக்கத்தை மூடி விடவும்.
இனிமேல் நீங்கள் இந்த இரு மின்னஞ்சல் ஊடாகவும் உங்களது வலைப்பதிவை சீர்செய்துகொள்ளவோ,மாற்றி அமைக்கவோ முடியும்.ஒரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை ஹாக் செய்யப்படாலும்,இன்னொரு மின்னஞ்சல் வாயிலாக Login செய்து ஹாக் செய்யப்பட்ட முகவரியை Remove செய்துவிடவும் முடியும்.
பின்பு நீங்களே இன்னொரு புதிய மின்னஞ்சல் முகவரியை Add Authors ஆக நிருவகிக்க முடியும்.இந்த வழிகளினூடே வலைப்பதிவை ஹக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.
நன்றி:எனது தம்பி பாலாஜி இமலாதித்தனின் வலைப்பூwww.tamilvaasal.blogspot.com
No comments:
Post a Comment