Thursday, September 24, 2009

ஆழ்நிலை தியானம் பற்றிய ஒரு நேரடி அனுபவம்

FRIDAY, OCTOBER 31, 2008
ஆழ்நிலைத் தியானம்

ஆழ்நிலைத் தியானம்--எத்தனையோ விதமான் தியானங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் தியானிக்க உதவுகிறது.
பொதுவாக தியானம் என்றவுடன் கண்ணை மூடி ஓர் இடத்தில் ஆடாமல் அசையாமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானிக்கவேண்டும் என்பதுதான் அனைவரது பொதுவான கருத்து. ஆனால் நான் உன்னத உடல் நிலையை பராமரிக்கவேண்டுமேன்றும் உன்னத மனோநிலையை பெறவேண்டுமென்றும் சில தியானங்களை முறையாகக் கற்றுக்கொண்டேன். எனக்குப்பிடித்த முறையில் அமையும் தியானத்தை பின்பற்றுவது என்றும் முடிவு செய்து கொண்டேன்.

அவ்வகையில் எனக்குப்பிடித்த ஆறு ஆண்டு காலமாக நான் செய்துவரும் ஆழ்நிலை தியானத்தைப் பற்றி தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஏன் ஆழ் நிலைதியானம்?

மிகச் சுலபமாக யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் எங்கு வேண்டுமானலும் செய்யக்கூடிய ஓர் உன்னத தியானம் இது.

எவ்வளவு நேரம் செய்யவேண்டும்?

காலையிலோ மாலையிலோ பதினைந்து முதல் இருபது நிமிடம் மட்டுமே.

எங்கு செய்யவேண்டும்?

வீட்டில் தங்களக்குப் பிடித்த எந்த இடமானாலும் சரி. வீட்டில் செய்ய நேரமில்லைஎனில் பஸ்ஸில், ரயிலில், விமானத்தில் தாங்கள் வண்டியை ஒட்டாத வகையில் இருந்தால் போதும்.

எவ்வர்று செய்ய வேண்டும்?

இதை முறையாக தியான ஆசிரியரிடம் நேரில் சென்றே கற்றுக்கொள்ளவேண்டும்.

பலன்கள்

மனோதைரியம். நல்ல தூக்கம் (தூக்கம் வராதவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதம்) மாணவர்கள் எனில் சிதறாத கவனம் (அதனால் கூடுதலாக மதிப்பெண்கள்).

முக்கியமாக மன ஆரோக்கியம் - மன ஆரோக்கியம் என்றால் உடல் ஆரோக்கியம் தானாகவே கிட்டிவிடும்.

உலகில் வாழும் அத்துணை மனிதர்களும் ஏதாவது ஓர் இடர் உடன்தான் வாழ்கின்றனர். பணம் மட்டுமே நிம்மதி இல்லை. பணம் இருந்தால் கட்டிலைமட்டுமே வாங்க முடியும் - தூக்கத்தை வாங்க முடியாது (சினிமா பாடல் வரிதான்) - ஆனால் அதுதான் உண்மை.

நான் இந்த நல்ல அரிய கலையைக் கற்றுக்கொண்டு நலமாகவும் வளமாகவும் வாழ்வது போன்று ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் அனவைருக்கும் நான் அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் கூறி விருப்பப்பட்டவர்களை நானே தியான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளேன்.

சென்னையில் மஹரிஷி வித்யா மந்திர் என்ற ஓர் பள்ளி சேத்துபட்டில் (டாக்டர் குருசாமி சாலை) உள்ளது . ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை தியானம் குறித்து ஒரு அறிமுக வகுப்பினை நடத்துகின்றனர். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இந்த அறிமுக வகுப்பில் தியானம் குறித்து முழுமையாக விளக்குகின்றனர். யாருக்கு விருப்பமோ அவர்கள் இந்த தியானம் கற்றுக்கொள்ள தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும இந்த தியானம் பணத்திற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை என்ற உண்மையை அறிந்துள்ளேன்.

நான் உண்மையிலேயே பலன் அடைந்ததால் இந்த விவரத்தை தங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன்.



இந்த தியானம் சம்பந்தமாக நான் பெற்ற அனுபவங்களை பின்னூட்டங்கள் மூலம் பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறேன்.

நன்றி:http://tamilarumbu.blogspot.com நடத்துபவர்:காமாட்சிஜெயராஜ்,சென்னை.

No comments:

Post a Comment