Monday, September 21, 2009

LOUGHING IS A MEDICINE

நகைச்சுவை விளம்பரங்கள்

நீங்கள் உம்மன்னா மூஞ்சியா? பதிவை விட்டு விலகுங்கள்
இது நகைச்சுவை ரசிகர்களுக்கான பதிவு.

விளம்பரங்களில்தான் எத்தனை வகை?
சில நகைச்சுவை விளம்பரங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
சிரித்து மகிழுங்கள்

1
மருத்துவமனை விளம்பரம்:
புகை பிடிப்பதால் உங்களின் எடை குறையும். முதலில் நுரையீரலின் ஒரு பகுதி

2
ஒரு நிறுவனத்தின் விளம்பரப் பலகை:
வெற்றி என்பது உறவு
அதிக வெற்றி; அதிக உறவு!
-------------------------------------
3
மதுவிற்கான விளம்பரம்:
குடியின் தீமைகளைப் பற்றிப் படித்தவுடன்
நிறுத்திவிட்டேன் - படிப்பதை!

4
எங்கள் தாத்தாவிற்குக் கண்ணாடி (Glass) தேவையில்லை
பாட்டிலைக் கையில் எடுத்தால் அப்படியே குடிப்பார்.

5
அழகு சாதன விளம்பரம்:
உங்கள் மகள் எப்போது பெரியவள் ஆகிறாள்?
ஒரு தடவைக்கு இரண்டு தடவை லிப்ஸ்டிக் பூசிக் கொள்ளும்போது!
உங்கள் மகன் எப்பொது பெரியவன் ஆகிறான்?
அம்மா பூசிவிட்ட லிப்ஸ்டிக்கைத் துடைத்துக் கொள்ளும்போது!

6
பாரில் இருந்த விளம்பரம்:
கவலையை மறப்பதற்காகக் குடிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நுழையும்போதே பணத்தைச் செலுத்திவிடுங்கள்!

7
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் முன் உள்ள விளம்பரப் பலகை:
உங்கள் மனைவி கார் ஓட்ட விரும்பினால் குறுக்கே நிற்காதீர்கள்!

8
பார்பர் சலூன் விளம்பரம்:
எங்கள் வியாபாரம் செழிக்க எங்களுக்கு உங்கள் ‘தலை’ யீடு வேண்டும்!

9
போக்குவரத்து விளம்பரம்:
வாகனங்களை செலுத்துவதற்கு உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்
- அவர்கள் பெரியவர்கள் ஆகும்வரை.
ஆனுமதித்தால் அவர்கள் பெரியவர்கள் ஆகாமல் போய்விடும் அபாயம் உண்டு!

10
பியூட்டி பார்லர் கதவில் இருந்த விளம்பரம்:
இங்கிருந்து செல்லும் பெண்ணை நக்கலடிக்காதீர்கள். அவர் உங்களுடைய
பாட்டியாக இருக்கலாம்.She May Be Your Grandmother !

11
கொசுறு
ஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்?
பெண்களின் கச்சா முச்சா கேள்விகளால்தான்!

இறக்குமதி சரக்கு; மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது!

எது நன்றாக உள்ளது? சொல்லிவிட்டுப் போங்கள்!






வாழ்க வளமுடன்!
Posted by SP.VR. SUBBIAH at Wednesday, June 17, 2009 20 comments Links to this post
Labels: spvrsubbiah, நகைச்சுவை, பல்சுவை
Monday, June 15, 2009
சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வேண்டாம்!
சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வேண்டாம்!

கீழே உள்ளவற்றைப் படியுங்கள். முடிந்தால் சிரியுங்கள்
சண்டைக்கு வரவேண்டாம்

1
காதலித்தது ஒருவரை;
கைப்பிடித்தது இன்னொருவரை
கைபிடித்தவர் கணவர் அல்லது மனைவியாகிறார்
காதலித்தவர் 'கடவுச்சொல்' ஆகிவிடுகிறார்!

*********
2
உலகின் அசத்தலான குழந்தை ஒன்றுதான்; ஒவ்வொரு தாய்க்கும் அது கிடைத்திருக்கிறது
உலகின் அசத்தலான மனைவி ஒருத்திதான்; ஒவ்வொரு பக்கத்து வீட்டுக்காரனுக்கும் அது கிடைத்திருக்கிறது!

*********
3
மனிதனின் கனவு

தாயார் நினைப்பதுபோல எப்போதும் நேர்மையாக இருப்பது
தன் குழந்தை நினைப்பதைப்போல எப்போதும் செல்வந்தனாக இருப்பது
மனைவி சந்தேகிப்பதைப்போல பல பெண்களின் உறவு கிடைப்பது!

*********
4
Husband & wife are like liver and kidney.
Husband is liver & wife Kidney.
If liver fails, kidney fails.
If kidney fails, liver manages with other kidney.

மின்னஞ்சலில் வந்தது. மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது!


வாழ்க வளமுடன்!
P.
ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரைவரும்!
ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரைவரும்!

ஆசிரமம் வைத்து ஆயிரக் கணக்கான மக்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்த சாமியார் ஒருவரும், தில்லியில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த டாக்சி டிரைவரும், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இறந்துபோய் மேலுலகம் போய்ச் சேர்ந்தார்கள்.

இருவரின் கணக்குப் புத்தகத்தையும் பார்த்த சித்திரகுப்தன், டாக்சி டிரைவருக்கு சகல வசதிகளையும் உடைய அரண்மனையைக் காட்டித் தங்கும்படி சொல்லிவிட்டு, சாமியாருக்கு ஒரு ஓலைக் குடிலைக் காட்டி தங்கும்படி உத்தரவிட்டான்.

சாமியாருக்கு வருத்தம்

"எத்தனை பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியிருப்பேன். எனக்கு இங்கே ஏன் இந்தக் கதி?"

சித்திர குப்தனிடம் மெல்லக் கேட்டார்.

அவன் அதிரடியாகப் பதில் சொன்னான்.

"உம்முடைய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்த மக்களெல்லாம் தூங்கினார்கள். அவன் வண்டியோட்டிக் கொண்டு போகையில் அதில் சென்ற மக்களெல்லாம் தூங்காமல் இறைவனைப் பிராத்தனை செய்தார்கள்"

இப்போது தெரிகிறதா?

செய்யும் தொழில் முக்கியமில்லை! மக்களை என்ன செய்ய வைக்கிறோம் என்பதுதான் முக்கியம்!


thanks:www.devakottai.blogspot.com
.

No comments:

Post a Comment