ஒலி விஞ்ஞானமும் இந்து தர்மமும்
பூமி தனது அச்சில் பஞ்சபூதங்களுக்கு இடையே சுழல்வதால் ஓம்காரம் என்னும் பிரணவ ஒலி உலகம்முழுவதும் சதா ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
அதனால்தான் மந்திரசொற்கள் ஓம் என்னும் ஒலியில் ஆரம்பிக்கின்றன.ஸ்ரீநடராஜப்பெருமாள் 51 அட்சரங்களின் வடிவம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.உலகில் எந்த மொழியில் பேசினாலும் இந்த 51 ஒலிக்குள் அடங்கும்.
இதையே சிதம்பரம் 51 என்று செப்புத்தகட்டில் மந்திரவாதிகள் வரைந்து உருவேற்றித் தருகின்றனர்.இந்த மந்திரத் தகட்டை நல்ல விஷயங்களுக்கும்,கெட்டவிஷயங்களுக்கும் பயன்படுத்தமுடியும்.
ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு மந்திரமுண்டு.இவைகள் எல்லாமே வானிலேயே காற்று மண்டலத்தில் கலந்துள்ளன.
ஒலிஅலைகள் காற்றில் கலப்பதால் எங்கும் மந்திர மொழியாகவே உள்ளன.உலகம் தோன்றிய நாள் முதல் உண்டான ஒலி அலைகள் ஆகாயத்தில் தேங்கியுள்ளன.
வெகுதொலைவில் நடக்கும் சம்பவங்களை ஒலியாகக்கேட்பது(telepathi) எப்படி?
பொதுவாக இம்மாதிரியான வெகுதூரக்கேட்டல் இந்து தர்மத்தில் வாக்குவாலை,கர்ணஎட்சிணி, கர்ணபைரவர் உபாசனை உள்ளவர்களுக்கும்,ஸப்தாகர்ஷண மந்திர ஜெபம் செய்பவர்களுக்கும் கிடைக்கிறது.
இதற்கு சங்கு உதவும்..
வெள்ளையாகவும் கீறல் இல்லாமலும் இருக்கும் சங்கை வாங்குங்கள்.கதர்கடைகளில் கிடைக்கும்.
கைக்கு அடக்கமானதாக இருக்க வேண்டும்.பேரம் பேசாமல் வாங்கவேண்டும்.அதை டெலிபோன் ரிசீவர் போல வலது உள்ளங்கையில் வைத்து வலதுகாதில் வைக்கவும்.சங்கின்மேற்புறம் காதின் மேற்புறமாக இருக்க வேண்டும்.எந்தத் திசையை நோக்கியும் இருக்கலாம்.
கண்களை மூடி மனதை ஒருமைப்படுத்தி கருத்தை வலதுகையில் பிடித்திருக்கும் சங்கில் செலுத்தவும்.சும்மா இருக்கும்போதெல்லாம் அமைதியான நேரங்களில் எல்லாம் தினமும் 15 நிமிடம் இதைச் செய்யலாம்.
முதலில் கரகர ஒலி கேட்கும்.பிறகு பலவித ஓசைகள் கேட்கும்.கடைசியில் பேச்சுக் குரல் கேட்கும்.
உங்கள் கருத்தை அமெரிக்காவை நோக்கி செலுத்தினால் அங்கு ரகசியமாக நடைபெறும் பேச்சுக்கள் உங்களுக்குக் கேட்கும்.
இந்நிலையை அடைய 90 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களாகலாம்.
இதேபோல, சிவலோகம்,பிரம்மலோகம்,எமலோகம் என எந்த உலகத்தில் என்னென்ன பேசுகிறார்கள்? என்பதை அறியமுடியும்.
ஒருவேளை உங்களுக்கு வலம்புரிச்சங்கு கிடைத்தால் இடதுகாதில் வைத்துமேற்படி முறையில் செய்யலாம்.
No comments:
Post a Comment