Saturday, September 12, 2009

எனது சிந்தனைகள்:1



இந்த 2009 ஆம் வருடம் ஜோதிடப்படி ஒரு அரிய வருடமாகும்.ஏனெனில், ஒரு மாத இடைவெளியில் தொடர்ச்சியாக பெரிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன.ஆகஸ்டு 2009 மாதத்தில் சனிப்பெயர்ச்சியாகிறது.சிம்மச்சனி, கன்னிச்சனியாக இடம்பெயருகிறார்.
செப்டம்பர் 2009 மாதத்தில் ராகு கேது பெயர்ச்சியாகிறது.மகர ராகு தனுசு ராகுவாகவும், கடக கேது மிதுன கேதுவாகவும் பெயர்ச்சியாகிறார்கள்.

நீசத்திலிருந்த குரு, மகர குரு கும்பகுருவாக நவம்பரில் பெயர்ச்சியாகிறார்.

கும்பத்தில் குரு இருக்கப் பிறக்கும் குழந்தைகள் மிக விஷேசமான தன்மையைப் பெறுகிறார்கள்.ஜோதிட உலகில் வியாழ வட்டம் என்ற வார்த்தை அடிக்கடி இடம்பெறும்.
அதென்ன வியாழ வட்டம்?
குரு தனுசு ராசியிலும், மீன ராசியிலும் ஆட்சி பெறுகிறார்.
தனுசு ராசியில் குரு இருக்கப்பிறந்தவர்கள் கோவில் சார்ந்த காரியங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுபவர்களாக இருப்பார்கள்.உதாரணமாக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களைச் சொல்லலாம்.இவருக்கு இவரது பிறந்த ஜாதகத்தில் தனுசு ராசியில் குரு இருக்கிறார்.

மீனத்தில் குரு இருக்கப்பிறந்தவர்கள் மனிதர்களை இயக்கும் தலைமைப்பண்பினைக் கொண்டவர்கள்.இதற்கு இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவை நடத்துபவரே உதாரணம்.பிரபலமான திரைப்பட இயக்குநர்கள், அரசியலில் பால்தாக்கரே போன்றவர்களைச் சொல்லலாம்.

குருவானவர் கடக ராசியில் முழுபலம் பெறுகிறார்.அதாவது உச்சமடைகிறார்.2002-2003 ஆம் வருடத்தில் இப்படி உச்சமானார். குரு உச்சமாக இருக்கப்பிறந்தவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாழ்க்கைப்பாதையில் மிகப்பிரம்மாண்டமான மாற்றம் உண்டாகும்.

அதே சமயம், குருவானவர் மகர ராசியில் நீசமாகிறார்.அதாவது முழுபலம் இழக்கிறார்.இந்த 2008-2009 ஆம் வருடத்தில் பிறந்தவர்களுக்கு குரு நீசமாகத் தான் இருக்கும்.இவர்களுக்கு நுண்ணறிவு இராது.தங்கம் தங்காது.திருமணம் 30 வயதுக்கு மேல்தான் நடக்கும்.ஒருவேளை 30 வயதுக்குள் திருமணமானால் முதல் குழந்தைபிறப்பதற்கு திருமணம் ஆன வருடத்திலிருந்து குறைந்தது 6 வருடங்களாகும்.

சரி! வியாழ வட்டம் . . . குருபகவான் சூரியனை விட சக்தி வாய்ந்தவர்.இவர் ரிஷபம், சிம்மம்,தனுசு, கும்பம் இந்த ராசிகளில் இருக்கும் போது இந்த பூமியை இயக்கும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பிறக்கக்காரணமாகிறார்.

சிம்மராசியில் குரு இருக்கப்பிறப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை நிர்வகிப்பவர்களாக வேலைபார்ப்பார்கள்.அதாவது வங்கி மேலாளர், லேவாதேவி(கோடிக்கணக்கில்), ரிசர்வ் வங்கியில் தங்கக்கட்டிகளை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பு, எம்.எல்.ஏ,எம்.பி., மந்திரி, பெரும் நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரி என சொல்லிக்கொண்டே போகலாம்.
இவர்களிடம் பணமும் அதிகாரமும் உடன் பிறந்த குணமாக இருக்கும்.

கும்பராசியில் குரு இருக்கப்பிறப்பவர்கள் தன்னைச்சுற்றிலும் உள்ள எல்லா மனிதர்களுக்கும் தன் வாழ்நாள் முழுக்க சிறுசிறு உதவிகள் செய்து கொண்டே இருப்பார்கள்.
இவரிடம் ஒரு சிறு உதவியை ஒரு முறை பெற்றாலும் , உதவி பெற்றவர் உதவி பெற்ற விநாடியிலிருந்து இவருக்கு(கும்பகுரு இருக்கப்பிறந்தவர்) தனது வாழ்நாள் முழுக்க ராஜவிசுவாசத்துடன் இருப்பார்கள்.
இதற்கு உதாரணம்: நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைச் சொல்லலாம்.பா.ம.க.தலைவர் இராமதாசு அவர்கள் இன்னொரு உதாரணம்!
(இப்போது புரிகிறதா? பா.ம.க.தொண்டர்கள் மருத்துவர் ஐயாவுக்கு ஏன் ராஜவிசுவாசமாக செயல்படுகின்றனர் என்று.
ரஜினி காந்த் அவர்களின் ரசிகர்களின் பாசம் வெறும் பாசம் அல்ல.ராஜ பாசம்!!!)
ரிஷபத்தில் குரு இருக்கப்பிறந்தவர்கள் வாழ்நாளில் 6 வருடங்கள் ஏற்றமும், அடுத்த 6 வருடங்கள் இறக்கமும் உண்டாகும்.இதனால் இவர்கள் எப்போதும் தலைக்கனம் இல்லாமல் செயல்படுவார்கள்.

இந்த 4 ராசிகளிலும் பிறக்கும் மனிதர்கள் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்களை தினமும் சந்திக்கும் வேலை அல்லது தொழில் மட்டுமே பார்ப்பார்கள்.

எனவே, எனது ஆன்மீகக்கடல் சகோதரர்களே! சகோதரிகளே!!
கும்பகுருவின் பலனை தாங்கள் அனுபவிக்க இந்த வருடத்தில் தாங்கள் ஒரு வாரிசை உருவாக்குவது மிக நன்று.

ஆகஸ்டு 2009 மாதத்தினைச் சேர்ந்த நமது ஆன்மீகக்கடலில் “யோகங்கள் நிறைந்த குழந்தைகள் பிறக்க ஜோதிட ஆலோசனை” என்ற வலைப்பூவை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.

No comments:

Post a Comment