Wednesday, January 23, 2013

தேச பக்தியுள்ளவர்கள் ஆட்சி: தா.பாண்டியன் விருப்பம்

காளையார்கோவில்: தெளிவான,தேச பக்தியுள்ளவர்கள் மத்தியில் ஆட்சி செய்ய மக்கள் சிந்திக்க வேண்டும்,என இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசினார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த இந்திய கம்யூ., கூட்டத்தில் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது: இந்தியாவில் 100 ஆண்டு கால கணக்கெடுப்பில் , வெளிநாடுகளைக் காட்டிலும் நான்கு மடங்கு மழை அதிகம் பெய்து வருகிறது. ஆனால் மழை நீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாகிறது. மன்னர் காலங்களில் உருவான ஏரி, கண்மாய், குளங்களை காணோம். நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தொழில் நுட்ப வல்லுனர்கள் அறிக்கை தயார் செய்து, 35 ஆண்டுகளாகியும் ஆட்சியாளர்கள் செயல்படுத்த வில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் நாட்டில் வறட்சியே இருக்காது. 2011ல் நடந்த தேர்தலில் தமிழகத்தில் நிலவிய மின்தடையால் தான் தி.மு.க.,தோல்வியை தழுவியது.இதனால் கூடன்குளம் அணுமின் நிலையத்தை திறக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். பூமிக்கு அடியிலிருந்து எடுக்கும் தண்ணீருக்கு கூட பொதுமக்கள் வரி செலுத்தும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது.மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இந்த தொகுதியை மேம்படுத்தவில்லை. அவர் நினைத்திருந்தால் பல தொழிற்சாலைகளை கொண்டு வந்து,வளர்ச்சியான தொகுதியாக மாற்றியிருக்க முடியும்.நதிகளை இணைத்து வறட்சியை போக்கவும், வகுப்புவாதம்,பயங்கரவாத சக்திகளை ஒழிக்கவும்,மின் உற்பத்தியை பெருக்கவும் தெளிவான தேச பக்தியுள்ளவர்கள்,மத்தியில் ஆட்சி செய்ய மக்கள் சிந்திக்க வேண்டும், என்றார்.thanks: dinamalar 23.1.13

No comments:

Post a Comment